சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைகளில் வசதிகள் செய்ய வழக்கு

Added : செப் 16, 2020
Share
Advertisement

மதுரை : மதுரை ரமேஷ். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: ஊரடங்கை அமல்படுத்தியும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை.

அரசு மருத்துவமனைகளில் குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். சுகாதாரமான உணவு வழங்க வேண்டும். அறைகளை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் கொரோனா பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும். நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்களை அதிகம் துவக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல கவுன்சிலிங் மையங்களை அரசு மருத்துவமனைகளில் துவக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு, 'இந்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கும் மற்றொரு வழக்குடன், இதையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X