பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை ஆர்வலரான ஜெ., உதவியாளர்

Added : செப் 16, 2020
Share
Advertisement
 இயற்கை ஆர்வலரான ஜெ., உதவியாளர்

தஞ்சாவூர்:மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன், இயற்கை ஆர்வலராக மாறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை, போயஸ் கார்டனில், அவரது உதவியாளராக பணியாற்றியவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் கடைசி காலம் வரை, அவரது நன்மதிப்பை பெற்றவர்களில் இவரும் ஒருவர்.ஜெயலலிதா மறைவுக்கு பின், போயஸ் கார்டனில் இருந்து வெளியேறினார்.

அதன் பின், தஞ்சைக்கு வந்து, விவசாயம் செய்து வருகிறார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளான நேற்று முன்தினம், பட்டுக்கோட்டை அடுத்த திருச்சிற்றம்பலம் கிராமத்தில், பசுமை போர்வை அமைப்பு மூலம், நீர் ஆதாரங்களின் மேம்பாட்டு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.குடிமராமத்து திட்டத்தில் குளம் துார் வாரி, குளத்தைச் சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டன.

விழாவில் பங்கேற்ற பூங்குன்றனை, இயற்கை ஆர்வலர் என வரவேற்றனர். நிகழ்ச்சியில் பூங்குன்றன் பேசியதாவது: நீரை மதிக்காதவன், தாயை மதிக்கத் தெரியாதவன். காவிரியை நாம் காவிரித் தாய் என்றே அழைக்கிறோம். இதிலிருந்தே நீரின் முக்கியத்துவத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். சாப்பிடாமல் கூட மனிதனால் வாழ்ந்து விட முடியும். ஆனால், நீரில்லாமல் ஓரிரு நாட்கள் கூட உயிர் வாழ முடியாது.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X