பொது செய்தி

தமிழ்நாடு

கண் தான விழிப்புணர்வு கருத்தரங்கில் வலியுறுத்தல்

Added : செப் 16, 2020
Share
Advertisement
 கண் தான விழிப்புணர்வு  கருத்தரங்கில் வலியுறுத்தல்

கோவை:கண் தானம் அதிகம் செய்யாததால், கண் அறுவை சிகிச்சைகள் போதிய அளவில் நடைபெறுவதில்லை என்று, கோவையில் நடந்த தேசிய கண்தான விழாவில் தெரிவிக்கப்பட்டது.தேசிய கண்தான இரு வார விழா, ஒவ்வொரு வருடமும் ஆக., 25 முதல் செப்., 8 வரை அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில், 84 லட்சம் பேருக்கு கருவிழி குறைபாட்டினால் பார்வை இழப்பு, குறைந்தது ஒரு கண்ணில் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ஆண்டுக்கு சுமார் 30,000 கண் தான அறுவை சிகிச்சை மட்டுமே செய்யப்படுகிறது. மக்கள் அதிக கண் தானம் செய்யாததே காரணம்.லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் லயன்ஸ் கிளப் மாவட்டம் இணைந்து, செப்.,8ல் கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சியை, வெபினார் வாயிலாக, லயன்ஸ் கிளப் உறுப்பினர்களுக்கு எடுத்து சென்றது. சுமார் 300 பேர் பங்கேற்றனர். துவக்க விழாவில், கோயம்புத்தூர் அரிமா மாவட்ட ஆளுநர் தர்மராஜ், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். லோட்டஸ் கண் மருத்துவமனையின், நிர்வாக அதிகாரி ராமலிங்கம் வரவேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X