சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாதாள சாக்கடை குழாய் பதிக்க வெட்டி சாய்க்கப்படும் 110 மரங்கள்

Added : செப் 16, 2020
Share
Advertisement
 பாதாள சாக்கடை குழாய் பதிக்க வெட்டி சாய்க்கப்படும் 110 மரங்கள்

கோவை:கோவை, திருச்சி ரோட்டில், பாதாள சாக்கடை குழாய் பதிப்பதற்காக, 110 மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன.ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில், ஒண்டிப்புதுாரில், ரூ.64.60 கோடியில், கழிவு நீர் சுத்திகரிக்கும் நிலையம் கட்டப்பட்டது. திருச்சி ரோட்டில், 4.91 கி.மீ., நீளத்துக்கு குழாய் பதிப்பது தாமதமானதால், இம்மையம் இன்னும் முழு செயல்பாட்டுக்கு வரவில்லை.தினமும், 6 கோடி லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்க வேண்டிய இம்மையத்தில், 2016 முதல், 30 லட்சம் லிட்டரே சுத்திகரிக்கப்படுகிறது.இதற்கு தீர்வு காண, கள்ளிமடையில் இருந்து ஒண்டிபுதுார் வரை, குழாய் பதிக்கும் பணியை, நீண்ட இழுபறிக்கு பின், மாநகராட்சி தற்போது துவக்கியுள்ளது.வருவாய்த்துறையில் அனுமதி பெற்று, 110 மரங்களை வெட்ட ஆரம்பித்திருப்பதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அவர்கள் கூறுகையில், 'மாநகராட்சி அதிகாரிகள் கள ஆய்வு செய்து, மரங்களை வெட்டி வீழ்த்தாமல், குழாய் பதிக்க முயற்சிக்க வேண்டும். ஒரு மரத்தை வெட்டினால், அதற்கு மாற்றாக, 10 மரக்கன்றுகள் நடுவோம் என்பது, அதற்கு ஈடாகாது.மரங்களை வெட்டுவது ஈசி; வளர்ப்பது கஷ்டம் என்பதை, ஒவ்வொருவரும் உணர வேண்டும். 10 ஆண்டுகள் வளர்ந்துள்ள மரங்களை வெட்டி வீழ்த்தும் செயலை நிறுத்த வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X