சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்ச வழக்கில் சுகாதார அலுவலருக்கு தண்டனை

Added : செப் 16, 2020
Share
Advertisement

மதுரை : லஞ்ச வழக்கில் மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர் விஜயகுமாருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

முதலாவது மண்டல சுகாதார அலுவலர் விஜயகுமார் 54, 2003 ல் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்தார். இவரிடம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் அண்ணாநகரில் குப்பை சேகரிக்கும் ஒப்பந்த பணியை நீட்டிக்க தனியார் தொண்டு நிறுவன மேற்பார்வையாளர் கோபால் அணுகினார். பணியை நீட்டிக்க அவரிடம் 2003 அக்.,10 ல் ரூ.500 மற்றும் அலைபேசியை லஞ்சமாக வாங்கியதாக விஜயகுமார் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்தனர். குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி மதுரை லஞ்ச ஒழிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் விஜயகுமாரை விடுதலை செய்தது.இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு போலீசார் உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தனர்.

நீதிபதி எம்.நிர்மல்குமார் உத்தரவு:விஜயகுமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது, என்றார்.மதுரை சிறைக்கு செல்லும் வழியில் விஜயகுமாருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X