பொது செய்தி

தமிழ்நாடு

அடல் திங்கரிங் ஆய்வகம்; பள்ளிகளுக்கு அழைப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement

கோவை:நிதி அயோக் திட்டத்தின் மூலம், அடல் திங்கரிங் ஆய்வகம் அமைக்க ஆர்வமுள்ள பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு சார்பில், அடல் திங்கரிங் லேப், 10 லட்சம் ரூபாய் செலவில், பள்ளிகளில் அமைத்து தரப்படுகிறது.இதில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் என, நான்கு பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு, செயல் மாதிரிகள் தயாரித்து, மாணவர்கள் பயிற்சி பெற வழிவகை செய்யப்படுகிறது.ஐந்து ஆண்டுகள் பராமரிப்பு செலவையும் ஏற்பதால், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாகும். தற்போது வரை மொத்தம், 223 பள்ளிகளில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கோவையில் உள்ள, 22 பள்ளிகளும் அடக்கம். கூடுதலாக நடப்பாண்டில் ஆயிரத்து 232 பள்ளிகளில், இந்த ஆய்வகம் அமைக்கப்படவுள்ளது.விருப்பமுள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், www.niti.gov.in என்ற இணையதளத்தில் உள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, விண்ணப்பிக்கலாம் என இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X