சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

திரிணமுல் இளவரசர் இவர்!

Added : செப் 16, 2020
Share
Advertisement

அக்கம் பக்கம்

திரிணமுல் இளவரசர் இவர்!

'ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் உங்கள் தலைவி, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்...' என, எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல் திணறுகின்றனர், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஊழல், முறைகேடு, வாரிசு அரசியல், சர்வாதிகார போக்கு என, எல்லா பிரச்னைகளையும் கையில் எடுத்து, தன்னை எதிர்க்கும் அரசியல்வாதிகளை ஆவேசமாக தாக்கும் குணமுடையவர் மம்தா.
சமீப காலமாக, மம்தா கட்சியிலேயே, சத்தமில்லாமல் வாரிசு அரசியல் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. 'மம்தா திருமணமாகாதவர் என்பதால், அவரது கட்சியில் வாரிசு அரசியலுக்கே வேலை இருக்காது' என்று தான், அனைவரும் நினைத்தனர். எனினும், அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜியின் அரசியல் வருகைக்குப் பின், எல்லாமே தலைகீழாக மாறி விட்டது. கட்சியின் இளைஞரணி தலைவர், லோக்சபா எம்.பி., என, மெல்ல மெல்ல, அவரை வளர்த்து விட்டார் மம்தா. இப்போது, கட்சியின் மொத்த கட்டுப்பாடும் அபிஷேக் பானர்ஜி வசம் வந்து விட்டது. கோல்கட்டாவில் உள்ள கட்சி தலைமையகத்துக்கு அவர் வந்தால், அந்த பகுதியே கலகலத்து விடும். 'திரிணமுல் கட்சியின், 'இளவரசருக்கு' தமிழக அரசியல்வாதிகளைப் போலவே, குனிந்து, வளைந்து நீங்கள் வணக்கம் போடுவதை பார்த்தால், ரொம்ப பரிதாபமாக இருக்கிறது' என, மூத்த நிர்வாகிகளை கிண்டலடிக்கின்றனர், எதிர்க்கட்சியினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X