கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'இ - பாஸ்' நடைமுறைக்குஎதிராக வழக்கு

Added : செப் 16, 2020
Share
Advertisement

மதுரை:தமிழகத்தில், 'இ - பாஸ்' நடைமுறைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தேனி, லோயர் கேம்ப்பைச் சேர்ந்த ஹரிகரசுதன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு:

கொரோனா ஊரடங்கில் மக்கள் நடமாட்டம், கூட்டத்தை தவிர்க்க, வாகனங்களுக்கு இ - பாஸ் வழங்கும் நடைமுறை இருந்தது. ஆக., 29ல் மத்திய அரசு, 'மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலம் விட்டு வேறு மாநிலம் செல்ல, இ - பாஸ் கட்டாயப்படுத்தக் கூடாது' என, உத்தரவிட்டது. ஆனால், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களில் தமிழகத்திற்கு வர, இ - பாஸ் முறை தொடரும் என, ஆக., 31ல் தமிழக அரசு அறிவித்தது.

இது, மத்திய அரசின் அறிவிப்பிற்கு முரணாக உள்ளது. தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, குறிப்பிட்டார். நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு, தமிழக சுகாதாரத் துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, அக்., 14க்கு ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X