பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி சாகுபடிக்கு மானியம்: தோட்டக்கலைத்துறை அழைப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement

கோவை:காய்கறி சாகுபடிக்கு மானியம் தேவைப்பட்டால், தோட்டக்கலைத்துறையில் விண்ணப்பிக்கலாம்.தேசிய தோட்டக்கலை இயக்ககத்தின் கீழ், மதுக்கரை வட்டாரத்தில், 236 எக்டர் காய்கறி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு எக்டருக்கு, 2,500 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயி, அதிகபட்சம், 2 எக்டர் வரை மானியம் பெறலாம்.ஊக்கத்தொகை பெற விரும்பும் விவசாயிகள், நில உரிமை மற்றும் காய்கறி பயிர் சாகுபடி செய்ததற்கான ஆவணங்களை, மதுக்கரை வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.அடங்கலில் நடப்பு ஆண்டுக்கான பயிர் பரப்பு விபரம், பதிவு செய்திருக்க வேண்டும். சிட்டா நகல், ஆதார் கார்டு நகல், இரண்டு புகைப்படங்களுடன், காய்கறி நாற்று அல்லது விதை வாங்கியதற்கான ரசீது கொடுத்து, தோட்டக்கலைத்துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுசிந்திரா தெரிவித்துள்ளார். கூடுதல் விபரங்களுக்கு, 90952 46221, 97892 62163, 80723 99817 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X