பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement

சென்னை:ரேஷன் கடைகளில், முக கவசம் வழங்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க, 34.54 லட்சம் ரூபாயை, மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், வைரஸ் தொற்று பரவலை தடுக்க, ரேஷன் கடைகள் வாயிலாக, முக கவசம் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.முதற்கட்டமாக, சென்னை மாநகராட்சி தவிர, மற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும், 69.09 லட்சம் கார்டுதாரர்களுக்கு, முக கவசம் வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில், முக கவசம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு, சிறப்பு ஊக்கத்தொகையாக, ஒரு கார்டுக்கு, 50 காசுகள் வீதம், 69.09 லட்சம் கார்டுகளுக்கு மொத்தம், 34.54 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.இந்த நிதியை, பேரிடர் மேலாண்மை ஆணைய நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டு, தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணை பிறப்பித்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X