சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

தற்கொலைக்கு பரிசா?

Added : செப் 16, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

தற்கொலைக்கு பரிசா?

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்வுக்குப் பயந்து, மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும், அதற்காகவே காத்திருந்த மாதிரி, ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக் கட்சிகள் நடந்து கொள்வதும், மிகவும் தவறான முன்னுதாரணம்.அந்த மாணவரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குவது என்பது, கொசுவுக்குப் பயந்து, வீட்டை கொளுத்தியவனுக்கு, 'வீர சாகச' விருது வழங்குவதை போன்றது.மாணவர்கள் உயிரிழப்பது வேதனை தான். 'கல்வி, தேர்வு போன்றவை, வாழ்க்கையின் ஒரு அங்கம் தான்' என, மாணவர்களுக்கு புத்தி சொல்வதை விடுத்து, தற்கொலைக்கு பரிசு வழங்குதல் கொடுமை அல்லவா?இதில், கட்சிகளுக்கு இடையே போட்டி வேறு. ஆளுங்கட்சி, 2 லட்சம் ரூபாய் என்றால், எதிர்க்கட்சி, 4 லட்சம் ரூபாய் என, இறப்பு நிகழ்ந்த வீட்டிலும் அரசியல் நடக்கிறது.வி.சி., தலைவர் திருமாவளவன் சொல்கிறார்... தற்கொலை செய்த மாணவரின் குடும்பத்திற்கு, மத்திய, மாநில அரசுகள், 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தரணுமாம். எவன் அப்பன் வீட்டு சொத்து?
அதற்கும் மேலே ஒருபடி போய், இவர் சொல்வது முட்டாள்தனத்தின் உச்சம். 'மாணவர்களின் பிஞ்சு உயிர்களுடன் விளையாட வேண்டாம்' என, அரசை எச்சரிக்கிறார். 'படி, பரிட்சை எழுது' எனச் சொல்வது தவறா?'நீட்' தேர்விற்காக, ஓரிரு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதால், அந்தத் தேர்வு வேண்டாம் என்பது, நம் அரசியல்வாதிகளின் கோரிக்கை. சரி... 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த சிலர், தற்கொலை செய்து கொண்டனரே... அந்த தேர்வுகளையும் வேண்டாம்
என்கின்றனரா?ஒட்டு மொத்தமாய், தேர்வையே ஒழித்து விட்டால், மாணவர்கள் சந்தோஷப்படுவர்; அவர்களின் ஓட்டு கிடைக்கும் என்பதற்காக, அதற்கு ஒரு போராட்டத்தை இவர்கள் நடத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதைக் கூட செய்யத் துணிவர் என்பதற்கு, 'அரியர்' விஷயமே சாட்சி.தற்கொலைக்கு பணம் கொடுக்கும் வழக்கத்தில், வேறொரு விபரீதமும் இருப்பதை உணர வேண்டும். பணத்தாசையால், இயற்கை சாவுகளும், கொலைகளும் கூட, தற்கொலைகளாகக் காட்டப்படும் அபாயம் உள்ளது.கள்ளக்காதலுக்காக, பெற்ற குழந்தைகளை காவு கொடுக்கும் சீர்கெட்ட சமூகம் இது. பணத்திற்காகவும், இந்த பாதகச் செயலை செய்யாது என்பது என்ன நிச்சயம்?தொலைநோக்கு சிந்தனை இல்லாத அரசியல்வாதி, புறம் தள்ளப்பட்ட கல்வியாளர், 'ஜால்ரா' தட்டும் அமைச்சர், பணத்திற்கு விலை போன சமூகம், ஆளுங்கட்சியை இடித்துரைக்க மறந்த எதிர்க்கட்சிகள், தவறாக வழிகாட்டும் திரைத் துறை... இத்தனைக்கும் நடுவில், மாணவன்
முன்னேறுவது எப்படி சாத்தியம்?மாணவனை தேர்வுக்குத் தயார்படுத்தாமல், அவனது தற்கொலைக்கு விலை கொடுப்பது, கேடுகெட்ட, முறையற்ற அரசியல் அநாகரிகம். இன்றைக்கு
இல்லாவிட்டாலும், என்றைக்காவது ஒருநாள், இது தவறான முன்னுதாரணம் என, மக்களுக்குப் புரியத் தான் போகிறது.

போலீசாருக்கு 'ராயல் சல்யூட்!'

பி.ஸ்ரீபாத ராஜன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: யாராவது ஒரு போலீஸ்காரர் தவறு செய்தால், அரசியல்வாதி உட்பட சிலர், வரிந்து கட்டியபடி, ஒட்டுமொத்த காவல் துறையையும் விமர்சிப்பர். அதே காவல் துறையினர், நல்லது செய்தால், கண்டுகொள்ள மாட்டார்கள்.போலீசாரால் ரவுடி கொல்லப்பட்டால், மனித உரிமை ஆணையம் முதல், எதிர்க்கட்சி வரை, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்துவர். அதே நேரம், ரவுடியால் போலீஸ்காரர் கொல்லப்பட்டால், யாரும் வருத்தப்பட மாட்டார்கள். இது குறித்து, நீதிமன்றமே, சமீபத்தில் அதிருப்தி தெரிவித்து இருந்தது.காவல் துறையினர், தங்கள் கடமையை செய்வதோடு, ஏராளமான சமூக பணியிலும் ஈடுபடுகின்றனர். அவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும்.போலீசாரின் வாரிசுகள், பிளஸ் 2 முடித்து இருந்தால், அவர்கள் விரும்பிய கல்லுாரியில், பிடித்தமான பாடப்பிரிவுகளில், 'சீட்' பெற்றுத் தரப்படும் என, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் சுற்றறிக்கை வெளியிட்டார்.
அதன்படி, முதற்கட்டமாக, 52 மாணவ -- மாணவியருக்கு, விரும்பிய கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளில் சேர இடம் கிடைத்தது.போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், சில வாரங்களுக்கு முன் மரணமடைந்த, தலைமை காவலர் முருகன் குடும்பத்தினரை சந்திக்கச் சென்றார். முருகனின், 17 வயது மகள் விடுத்த கோரிக்கையின் படி, காவல் குடியிருப்பில் தொடர்ந்து வசிக்க அனுமதியளித்தார். மேலும், அந்த பெண்ணின் மேற்படிப்பிற்கும் உதவியுள்ளார்.
தவிர, சென்னையில் சமீபத்தில் இறந்து போன தேசிங்கு, ராபர்ட் என்ற இரு காவலர்கள் குடும்பத்திற்கு, தனிப்பட்ட முறையில், 15 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார்.உத்தரவு எழுதும் கைகள், உதவும் கரங்களாக வருவது, எவ்வளவு பெருமைக்குரியது!பதவியும், பணிவும் சேர்ந்து இருப்பது, அரிது. இவ்வித நற்பண்புகளை உடைய, போலீஸ் கமிஷனரை எவ்வளவு பாராட்டி
னாலும் தகும்.காவல் பணியுடன், தன்னலமற்ற பல வித சமூக சேவைகளை, கீழ்ப்பாக்கம் தலைமை செயலக காலனியில், காவல் ஆய்வாளராக இருக்கும், ராஜேஸ்வரி செய்து வருகிறார்.இவர் செய்து வரும் சமூக சேவைகள், கணக்கிலடங்கா. சமீபத்தில் கூட, ஒரு ஏழைப் பெண்ணிற்கு திருமண சீர்வரிசை கொடுத்து அசத்தியுள்ளார். தந்தை இறந்த சோகத்திலும், கடமை உணர்வுடன், சுதந்திர தின அணிவகுப்பை முன்னின்று நடத்திய, திருநெல்வேலி ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியையும் எவ்வளவு
பாராட்டினாலும் தகும்.துாத்துக்குடியில், ரவுடியை பிடிக்கச் சென்றபோது, நாட்டு வெடிகுண்டு வீசியதில், போலீஸ்காரர் சுப்பிரமணியன் இறந்தார். தென்மண்டல போ லீஸ் சரகத்துக்கு உட்பட்ட, 10 மாவட்டங்களில் பணியாற்றும் போலீசாரின் பங்களிப்பில், சுப்பிரமணியன் குடும்பத்திற்கு, 86.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இவ்விதம் கருணை உள்ளத்துடனும், கடமை உணர்வுடனும் பணியாற்றி வரும் நல்ல உள்ளங்களால், காவல் துறை மேன்மேலும் சிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக போலீசாருக்கு, 'ராயல் சல்யூட்!'

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
17-செப்-202015:32:31 IST Report Abuse
r.sundaram திமுக தேர்தலில் தொற்று விட்டது அதனால் இனிமேல் தேர்தலே வேண்டாம் என்று சொல்லலாமா? நீட் வேண்டாம் என்பவர்களை பார்த்து கேட்க தோன்றுகிறது.
Rate this:
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
17-செப்-202014:38:57 IST Report Abuse
A.Gomathinayagam தற்கொலைக்கு போட்டிபோட்டு கொண்டு பரிசளிக்கும் அரசியல் கட்சிகள் ,அந்த பணத்தை வைத்து திறமையான கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி கொடுத்து தேர்வில் வெற்றி பெற செய்யலாமே
Rate this:
Cancel
Raghavan - chennai,இந்தியா
17-செப்-202012:11:54 IST Report Abuse
Raghavan முனைவர் திரு மீனாட்சி பட்டாபிராமன் அவர்களின் கருத்து ஏற்கத்தக்கது மேலும் ஆளும் கட்சியையும் எதிர் கட்சியையும் சிந்திக்கவைக்கும். திருமாவளவன் வேண்டுகோளுக்கு அவர் கொடுத்தது ஒரு சாட்டையடி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X