பொது செய்தி

தமிழ்நாடு

தேர்வுகளை தவற விட்ட மாணவர்கள் மாற்று ஏற்பாடுகள் என்ன?

Added : செப் 16, 2020
Share
Advertisement

கோவை:முக்கிய தேர்வுகளை பல்வேறு காரணங்களால், தவற விட்ட மாணவர்களுக்கான, மாற்று ஏற்பாடுகள் என்ன என்பது குறித்து, கேள்வி எழுந்துள்ளது.நாடு முழுவதும் ஒருங்கிணைந்த இன்ஜி., படிப்புக்கான(ஜே.இ.இ.,) தேர்வுகள் கடந்த, 1ம் தேதி முதல், 6ம் தேதி வரை நடந்தது. அதே போன்று எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' தேர்வு, 13ம் தேதி நடந்தது.இத்தேர்வுகளுக்கு போக்குவரத்து வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் தாமதமாக சென்றனர். அந்த மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதுபோன்ற மாணவர்களுக்கு தேர்வுகள் எழுத, மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.'நீட் போன்ற முக்கிய தேர்வுகளை, சில தவிர்க்க முடியாத காரணங்களால் தவறவிடும் மாணவர்களுக்கு, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இது குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து, விசாரணை நடத்த வேண்டும். இது போன்று தேர்வுகளை தவறவிடும் மாணவர்களுக்கு, மாற்று ஏற்பாடுகள் வழங்கும் வகையில், மத்திய அரசு விதிமுறைகளை வகுக்க வேண்டும்' என்பதே பெற்றோர் பலரின் கோரிக்கை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X