பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் படைவீரர் வாரிசுகள் கல்வி நிதியுதவி  பெற அழைப்பு

Added : செப் 16, 2020
Share
Advertisement

கோவை:முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள், 2020-21 கல்வியாண்டில், முதலாமாண்டு தொழில் மற்றும் தொழில் சார்ந்த அங்கீகரிக்கப்பட்ட, பட்ட படிப்புகளில் பயிலும் மாணவர்கள், பிரதமரின் கல்வி உதவித்தொகையை பெற, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்., பி.இ., பி.டெக்., பி.டி.எஸ்., பி.வி.எஸ்.சி., பி.எஸ்சி., நர்சிங், அக்ரி, பி.எட்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.பார்ம்., உள்ளிட்ட தொழில்சார்ந்த படிப்புகளை, அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனங்கள், பாடப்பிரிவுகளில் படிக்க வேண்டியது அவசியம். பிளஸ்2 தேர்வில், 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல், தேர்ச்சி பெற்று இருத்தல் அவசியம்.முன்னாள் படைவீரர்களின் இரு குழந்தைகள் மட்டுமே, இத்திட்டத்தில் பயன்பெற முடியும். இதற்கான விண்ணப்பங்கள், தகவல் கையேடுகளை, www.ksb.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 2020, டிச., 31ம் தேதிக்குள், ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற கலெக்டர் ராஜாமணி அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X