பொது செய்தி

இந்தியா

கி.ரா.,வுக்கு 99வது பிறந்த நாள்

Added : செப் 16, 2020
Share
Advertisement
 கி.ரா.,வுக்கு 99வது பிறந்த நாள்

புதுச்சேரி:எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பிறந்த நாளையொட்டி, அவருக்கு, முதல்வர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்தார்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்த இடைச்செவல் கிராமத்தில், 1922 செப்டம்பர், 16ல் பிறந்தவர், எழுத்தாளர் கி.ரா., என்றழைக்கப்படும் கி.ராஜநாராயணன். ஏழாம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற அவர், 40 வயதுக்கு மேல் எழுதத் துவங்கினார்.

'மாயமான்' என்ற முதல் சிறுகதை, 1958ல், 'சரஸ்வதி' இதழில் வெளியானது. கரிசல் பூமி மக்களின் வாழ்க்கை, துன்பங்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்களை இவரது எழுத்துகள் விவரித்தன. 'கோபல்லபுரத்து மக்கள்' நாவலுக்காக, 1991ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.

புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றினார். தற்போது, புதுச்சேரி, லாஸ்பேட்டை, அரசு குடியிருப்பில் வசித்து வரும் இவர், தள்ளாத வயதிலும் சோர்வின்றி எழுதி வருகிறார். நேற்று, 99 வயதில் அடியெடுத்து வைத்த இவருக்கு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, முதல்வரின் பார்லிமென்ட் செயலர் லட்சுமிநாராயணன் ஆகியோர், நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

எம்.பி.,க்கள் ரவிகுமார், கனிமொழி, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் ஹாசன், நடிகர் சிவகுமார் உட்பட பலர், தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X