கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரூ.65 கோடி மோசடி வழக்கு: தந்தை-மகன் ஜாமின் தள்ளுபடி

Added : செப் 16, 2020
Share
Advertisement

கோவை,:நிதி நிறுவனம் நடத்தி, 65 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதான, தந்தை-மகன் ஜாமின் மனு, மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.கோவை ராமநாதபுரம், கிருஷ்ணசாமி நகரில், செயல்பட்டு வந்த 'கிரின் கிரஸ்ட்' என்ற ஆன்லைன் நிதி நிறுவனம், டெபாசிட்தாரர்களை ஏமாற்றி மோசடி செய்ததாக, புகார் அளிக்கப்பட்டது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கையில், 65 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரிந்தது.அந்நிறுவன பங்குதாரர்கள், சென்னையை சேர்ந்த மணிகண்டன், இவரது மகன் சஞ்சய் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்கள் டான்பிட் கோர்ட்டில், தாக்கல் செய்த ஜாமின் மனு, தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக மனு செய்தனர்.அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.இவர்கள் பாலக்காடு, ஐதராபாத், மும்பை ஆகிய இடங்களில், நிதி நிறுவனம் நடத்தி, மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மற்ற மாநில போலீசார், கோவை வந்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X