சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

வேளாண் திட்டங்களில் 'விளையாடிய' அதிகாரிகள்!

Added : செப் 16, 2020
Share
Advertisement

 டீ கடை பெஞ்ச்

வேளாண் திட்டங்களில் 'விளையாடிய' அதிகாரிகள்!
''பிளாக் டீ போடும் நாயர்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்த அன்வர்பாய், ''கட்சி நிர்வாகமே குழப்பத்துல இருக்குது பா...'' என, அரட்டையை
ஆரம்பித்தார்.
''எந்த கட்சியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''சமீபத்துல நடந்த, தி.மு.க., பொதுக் குழுவுல, துணை பொதுச் செயலர், ஆ.ராஜா, பொதுப் பிரிவினர் பட்டியல்ல தான் தேர்ந்தெடுக்கப்பட்டாராம்... ஆனா, கட்சி போஸ்டர், அழைப்பிதழ்ல, 'புரோட்டாகால்' வரிசைப்படி, ஐந்து துணை பொதுச் செயலர் பட்டியல்ல, ஐ.பெரியசாமிக்கு அடுத்து பொன்முடி, அவருக்கு அடுத்து, சுப்புலட்சுமி ஜெகதீசன், அடுத்து ராஜா, கடைசியா அந்தியூர் செல்வராஜ் பெயரை போடுறாங்க பா...
''பொன்முடிக்கு அடுத்து, ராஜா பெயரை போடாம, கடைசி வரிசையில பெயர் இருந்தா, எப்படி பொதுப் பட்டியல் கணக்குல வரும்னு, ராஜா ஆதரவாளர்கள் கேள்வி கேட்கிறாங்க...
''அதுவும் இல்லாம, புதிய நியமனங்கள்ல, யாருக்கு என்ன அதிகாரம்னும் தெரியலையாம்... ஒருத்தருக்கு ஒருத்தர் வெளியில சிரிச்சபடி, போட்டோவுக்கு, 'போஸ்' குடுத்தாலும், உள்ளுக்குள்ள புகைச்சலா தான் இருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஆலையை துாக்கி நிறுத்த முயற்சி எடுக்குறாங்க...'' என, அடுத்த மேட்டருக்கு நகர்ந்தார், அந்தோணிசாமி.
''எந்த ஆலைன்னு விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார்,
குப்பண்ணா.
''மதுரை மாவட்டம், அலங்காநல்லுார்ல, தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இருக்குது... இங்க, சில ஆண்டுகளா விவசாயிகள் கொடுத்த கரும்புக்கு, பணம் பட்டுவாடா
பண்ணலைங்க...
''அதுவும் இல்லாம, நிர்வாக சீர்கேடுகளால, ஆலை இயங்குற அளவுக்கு கரும்பு உற்பத்தியும் இல்லை... ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியலை... இதனால, இங்க இருந்த நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள், வேறு இடங்களுக்கு மாறுதல் வாங்கிட்டு போயிட்டாங்க...
''இப்ப, செந்தில்குமாரின்னு ஒரு அதிகாரியை நியமிச்சிருக்காங்க... இவங்க, முதல் கட்டமா, அரவைக்கு தேவையான கரும்பு உற்பத்தி பரப்பை அதிகரிக்க, நடவடிக்கை எடுத்திருக்காங்க... கரும்பு ஆய்வாளர்கள் மூலம், விவசாயிகளை ஊக்கப்படுத்தி, சீக்கிரமே அரவையை துவங்க ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்க...'' என்றார்,
அந்தோணிசாமி.

''கந்தசாமி,
அன்பழகன்னு யாராவது என்னை தேடி வந்தாவளா...'' எனக் கேட்டபடியே வந்த அண்ணாச்சி, ''மோசடியில இருந்து தப்பிக்க, காய் நகர்த்திட்டு இருக்காவ வே...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினார்.
''யாரு, என்ன மோசடி பண்ணா ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், உதவி வேளாண் அலுவலகத்துல இருக்கிற அதிகாரி, 13 வருஷங்களுக்கு மேலா, அங்கனயே பெஞ்ச் தேய்ச்சிட்டு இருக்காரு... சில மாசங்களுக்கு முன்னாடி, கெங்கவல்லிக்கும், ஏற்காடுக்கும் இவரை அடுத்தடுத்து
மாத்துனாவ வே...''ஆனா, உள்ளூர் அரசியல் பிரமுகர்களை பிடிச்சு, பழைய இடத்துக்கே வந்துட்டாரு... இவரும், இவருக்கு துணையா இருக்கிற அதிகாரியும் சேர்ந்து, தென்னை வளர்ப்பு, படைப்புழு தாக்குதல், சொட்டு நீர் பாசனம்னு பல திட்டங்கள்ல புகுந்து விளையாடுதாவ வே...
''இப்ப நடந்திருக்கிற பிரதமர் உதவித்தொகை மோசடியிலயும், இவங்களுக்கு நிறைய பங்களிப்பு இருக்கு... இப்ப, மாட்டிக்காம இருக்க, அரசியல் புள்ளிகள் உதவியை நாடிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X