பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம்: கொரோனா டிஸ்சார்ஜ் 4839

Added : செப் 16, 2020
Share
Advertisement

மதுரை:ராமநாதபுரத்தில் கொரோனா குணமாகி 4839 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.மதுரை 34மதுரை மாவட்டத்தில் நேற்று 34 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். இதுவரை 14,405 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 97 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 15,578 ஆகும். புதிய இறப்பு இல்லை. இதுவரை 374 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 799 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

திண்டுக்கல் 68

திண்டுக்கல்லில் நேற்று 68 பேர் குணமடைந்தனர். டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 7242 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் 14 பெண்கள் உட்பட 68 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. மொத்தம் 8065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 672 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தேனி 84

தேனி மாவட்டத்தில் நேற்று 84 பேர் 'டிஸ்சார்ஜ்' ஆகினர். மொத்தம் 13,098 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று புதிதாக 50 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 13,965 ஆக உயர்ந்தது. கூடலுார் லோயர்கேம்ப் அம்பேத்கர் காலனி 96 வயது முதியவர், போடி காந்திநகர் வெள்ளையாண்டித்தெரு 56 வயது பெண் ஆகியோர் கொரோனாவால் இறந்தனர். பலி எண்ணிக்கை 234 ஆக உயர்ந்தது.

ராமநாதபுரம் 30

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 30 பேர் கொரோனாவில் இருந்துமீண்டனர். புதிதாக 36 பேருக்கு கொரோனா உறுதியானது. மொத்தம் 5269 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 4839 பேர் குணமடைந்துள்ளனர்.பலி 114 ஆக உள்ளது. தற்போது 276 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சிவகங்கை 13

சிவகங்கையில் கொரோனா குணமாகி 13 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். நேற்று சிவகங்கையை சேர்ந்த 5 பேர், மதுரையை சேர்ந்த 3 பேர், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என 9 பேருக்கு கொரோனா உறுதியானது.

விருதுநகர் 85

விருதுநகரில் நேற்று 85 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். புதிதாக 50 பேருக்கு கொரோனா உறுதியானது. இதுவரை பாதிக்கப்பட்ட 13 ஆயிரத்து 817 பேரில் 13 ஆயிரத்து 244 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 368 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

திருநெல்வேலி 130

திருநெல்வேலியில் 130 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 10183 பேர் குணமாகி உள்ளனர். 118 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 11429 ஆனது. தற்போது 1054 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒருவர் பலியானதால் இறப்பு 192 ஆனது.

தென்காசி 136

தென்காசியில் நேற்று 136 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். மொத்தம் 5800 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 70 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 6467 ஆனது. தற்போது 545 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒருவர் பலியானார். மொத்தம் 122 பேர் இறந்துள்ளனர்

துாத்துக்குடி 40

துாத்துக்குடியில் நேற்று 40 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 11660 பேர் குணமாகி உள்ளனர். நேற்று 85 பேருக்கு கொரோனா உறுதியானது. பாதிப்பு 12543 ஆனது. தற்போது 764 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 119 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X