பொது செய்தி

தமிழ்நாடு

வன மரபியல் நிறுவனத்தில் ஓசோன் தின கொண்டாட்டம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

கோவை:கோவை, வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில், சர்வதேச ஓசோன் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, 'பேஸ்புக்' நேரலையில் நடந்தது.இதையொட்டி நடந்த ஆன்லைன் வினாடி வினா போட்டியில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பேசிய, முதுநிலை முதன்மை விஞ்ஞானி கண்ணன் வாரியர், ஓசோன் படலத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.வன மரபியல் நிறுவன இயக்குனர் டாக்டர் குஞ்சிகண்ணன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, ஓசோன் படலத்தை பாதிக்கும் ரசாயனங்கள் குறித்தும், படலம் பாதிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விளக்கினார்.நிகழ்ச்சியில், விழிப்புணர்வு போஸ்டர் வெளியிடப்பட்டது. ஆன்லைன் வினாடி வினா போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும், 'இ-சான்றிதழ்' வழங்கப்பட்டது. திட்ட அலுவலர் விக்னேஸ்வரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X