பொது செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானல் வருவோருக்கு 'இ - பாஸ்' தேவையில்லை

Added : செப் 16, 2020
Share
Advertisement

கொடைக்கானல்:'கொடைக்கானலுக்கு பஸ் மூலம் வருபவர்களுக்கு, 'இ - பாஸ்' தேவையில்லை' என, சப் - கலெக்டர் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு, சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்பட்ட நிலையில், 'இ - பாஸ்' முறை கட்டாயம் என அரசு அறிவித்தது. பஸ்களில் வருவோருக்கும், இ - பாஸ் தேவை என்ற நிலையில், இல்லாதவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச்சாவடியில் இறக்கி விடப்பட்டனர்.

இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, சப் - கலெக்டர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்ட அறிக்கையில், 'பொது போக்குவரத்து மூலம் வருகிறவர்களுக்கு, இ - பாஸ் தேவையில்லை. பிற்காலத்தில், நோயின் தீவிரத்தை பொறுத்து, இந்நடைமுறை மாற்றப்படலாம்' என, தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X