சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

ரெண்டு வருஷம் போச்சு!

Updated : செப் 17, 2020 | Added : செப் 16, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
 சொல்கிறார்கள்

தமிழக அரசியலை கலங்க அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இவர், கப்சிப் ஆக உள்ளது பற்றி, ஜெ., அண்ணன் மகள் தீபா: 'எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை' என்ற கட்சியை துவக்கியது உண்மை தான். அந்தப் பெயரை சும்மா வைக்கலை. பதினைஞ்சு பேர், வெவ்வேற பெயர்களைப் பரிந்துரை செய்து, அதில் நான் இந்த பெயரை தேர்வு செய்தேன். துாங்கி எழுந்தால், முதல்வன் படத்துல வர்ற மாதிரி, மக்கள் கூட்டம் வாசல்ல நிக்கும். நிறைய பேரு என்னை எமோஷனலா, 'அரசியலுக்கு வாங்க'ன்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க; ஆரம்பத்துல நான் ஏத்துக்கவே இல்லை; ஏன்னா, எனக்கு அரசியல் தெரியாது.ஊடகங்கள் என்னை கவனிக்கும் முன், சிலர் என்னை, அத்தை சாயலில் இருக்கிறேன் என நினைத்து, என்னைப் பார்க்க வர ஆரம்பிச்சிட்டாங்க. நீங்க நம்ப மாட்டீங்க; அ.தி.மு.க., உறுப்பினர் கார்டையெல்லாம் கட்டுக்கட்டா கொண்டு வந்து, வீட்டு வாசல்ல கொட்டிட்டுப் போயிடுவாங்க. என் தனிப்பட்ட விருப்பத்துக்கு எதிராக தான், அரசியலுக்கு வந்தேன். அது தப்பான முடிவுன்னு தாமதமாக தான் புரிஞ்சுக்கிட்டேன். அரசியலில் நல்ல பெயர் கிடைக்கலை. கடினமா உழைச்சும், உரிய அங்கீகாரம் கிடைக்கலை. ஏமாற்றம் தான் மிஞ்சியது. அரசியலுக்கு வந்த பிறகு, நான் இழந்தது நிறைய. துாக்கம், சாப்பாடு, நிம்மதி போச்சு. ஒரு கட்டத்தில், 'இது நமக்கு சரிப்பட்டு வராது'ன்னு தோணுச்சு. நம்ம பாதை வேறன்னு முடிவெடுத்து, பேரவையைக் கலைச்சிட்டு விலகிட்டேன்; இப்ப நான் நிம்மதியா இருக்கேன்.அரசியலில் நுழைந்தது, எனக்கு ஒரு பாடம். ஒரு வாய்ப்பு வந்தது வந்தேன். இது நம்ம ஏரியா இல்லைன்னு தெரிஞ்சதும் விலகிட்டேன். அரசியலைத் தாண்டி, இந்த உலகத்துல நிறைய இருக்குங்க. அடிப்படையில் நான் ஒரு பத்திரிகையாளர். என் கனவு, ஒரு எழுத்தாளரா ஆகணும் என்பது தான். இனி அதை நோக்கித் தான், என் பயணம் இருக்கும்.என் வாழ்க்கையில் ரெண்டு வருஷத்தை வீணாக்கிட்டேன். பச்சைக் காக்கா பறக்குதுன்னா, 'ஆமா பறக்குது'ன்னு சொல்லத் தெரியாது எனக்கு. அதனால் எனக்கு, 'இனி அரசியலே போதும்டா சாமி'ன்னு முடிவெடுத்துட்டேன். என்னைப் பத்தி, சமூக வலைதளங்களில் வரும் காட்சிகளை பார்ப்பேன்; நகைச்சுவையா இருந்தால், ரசித்து சிரிப்பேன்.அரசியலில் ஈடுபட்ட, இரண்டு ஆண்டுகளாக வறண்டு போயிருந்த, 'கிரியேட்டிவிட்டி' இப்ப தோண ஆரம்பிச்சிருக்கு. மனசுக்குள்ள நிறைய, 'ஒன்லைன்ஸ்' ஓடுது. நிறைய எழுதணும்னு பிளான் போட்டு வெச்சிருக்கேன். சமைக்கிறது, சாப்பிடுறதுன்னு இருந்தேன். அதனால, 'ஒர்க் அவுட்' பண்ணணும். இனிமே தான் வெளியில டிராவல் பண்ணணும். என்னோட, '2.0 வெர்ஷன்' நிச்சயம் ஆச்சர்யமா இருக்கும்!

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ketheesh Waran - Bangalore,இந்தியா
17-செப்-202023:00:19 IST Report Abuse
Ketheesh Waran தீபா நீங்களா அரசியலுக்கு வரணும் உண்மையான அதிமுக தொண்டன் சசிகலா EPS OPS தினகரன் தீபா இணைந்து அதிமுக இருப்பதையே விரும்புவான்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-செப்-202018:19:22 IST Report Abuse
Endrum Indian எல்லோருக்கும் இல்லாத ஆசையா தன் முகம் கண்ணாடியில் பார்த்த பிறகு தான் சிலருக்குப்புரியும் தான் யார் என்று அதைப்போல புரிந்தால் அதன் படி நடந்து கொண்டால் வாழ்க்கை நல்லவிதமாக நடக்கும் அவ்வளவே
Rate this:
Cancel
ocean - Kadappa,இந்தியா
17-செப்-202008:13:27 IST Report Abuse
ocean உன் தந்தையோ உன் சகோதரனோ அல்லது நீயோ உன் அத்தையை ஆரம்பத்திலேயே வேறொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்வதை தடை செய்து அவருக்கு நீங்கள் சரியான ஆதரவு தராமல் போனது நீங்கள் செய்த பெரிய தவறு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X