பொது செய்தி

தமிழ்நாடு

வரும் 21ம் தேதி முதல் மக்கள் குறைதீர் கூட்டம்: வி.ஏ.ஓ., அலுவலகங்களில் நடத்த கலெக்டர் முடிவு

Added : செப் 16, 2020
Share
Advertisement

கோவை:''கோவையில், வரும் 21ம் தேதி முதல் ஒவ்வொரு வாரம் திங்கள் கிழமைகளில், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) அலுவலகத்தில், பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்,'' என, கலெக்டர் ராஜாமணி அறிவித்துள்ளார்.
கலெக்டர் அலுவலகத்தில், ஒவ்வொரு வாரமும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு, பல்வேறு கோரிக்கைகளை, பொதுமக்கள் மனுக்களாக அளிப்பர். வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் முதல் குறைதீர் கூட்டம், தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், வி.ஏ.ஓ., அலுவலகங்களில், வரும் 21ம் தேதி முதல் திங்கள் கிழமைதோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காலை, 10:00 முதல் 1:00 மணி வரை கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.வி.ஏ.ஓ., பணியிடம் காலியாகவுள்ள இடங்களில், மதியம், 2:00 முதல் 5:00 மணி வரை கூடுதல் பொறுப்பு வகிக்கும், அதிகாரிகள் மனுக்களை பெறுவர்.
பொதுமக்கள் கூட்டம் கூடாமல், முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும்.இதுகுறித்து, கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:முதியோர், ஆதரவற்றோர், விதவை, மாற்றுத்திறனாளி, உழவர் பாதுகாப்பு, இலங்கை அகதி உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகை பெற, தனியாக மனுக்கள் அளிக்க அவசியமில்லை. இ-சேவை மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.இலவச வீட்டுமனைபட்டா, இலவச வீடு, கல்விக்கடன், புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல், மருத்துவ உதவி, அடிப்படை வசதி மேம்பாடு, தெருவிளக்கு, சாலை வசதி, போன்ற கோரிக்கைகளை நேரில் அளிக்கலாம். ஒவ்வொரு கோரிக்கை விண்ணப்பமும், முறையாக பதிவு செய்து, அதற்கான ஒப்புகை சீட்டு, வி.ஏ. ஓ.,வால் வழங்கப்படும்.
முறையான பதிவுக்கு பின்பு, தனி வட்டாட்ச்சியருக்கு அனுப்பிவைக்கப்பட்டு, மனுக்கள் அந்தந்த துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை, தொடர்ந்து ஆய்வு செய்வேன். தொடர்புடைய துறைகள், 15 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொண்ட விபரத்தை, விண்ணப்பதாரர்களுக்கு அளித்து, கலெக்டருக்கு எழுத்து வாயிலாக, தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை, இந்டைமுறை தொடரும். தேவையின்றி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வருவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.இலவச வீட்டுமனைபட்டா, இலவச வீடு, கல்விக்கடன், புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல், மருத்துவ உதவி, அடிப்படை வசதி மேம்பாடு, தெருவிளக்கு, சாலை வசதி, போன்ற கோரிக்கைகளை நேரில் அளிக்கலாம். ஒவ்வொரு கோரிக்கை விண்ணப்பமும், முறையாக பதிவு செய்து, அதற்கான ஒப்புகை சீட்டு, வி.ஏ.ஓ.,வால் வழங்கப்படும்.-ராஜாமணி, கோவை கலெக்டர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X