சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பி.ஏ.பி., வாய்க்காலில் மிதந்த ஆண் சடலம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

சூலூர்:சுல்தான்பேட்டை அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் மிதந்த ஆண் சடலம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.சுல்தான்பேட்டை அடுத்த நகர களந்தை பி.ஏ.பி., வாய்க்காலில், 55 வயது ஆண் சடலம் மிதப்பதாக, மலைப்பாளையம் வி.ஏ.ஓ., ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்தது. அவர், சுல்தான்பேட்டை போலீசில் புகார் தெரிவித்தார்.சம்பவ இடத்துக்கு சென்ற, எஸ்.ஐ.,ரவி, ஏட்டு ரஞ்சித் மற்றும் போலீசார் சடலத்தை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது குறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், சடலமாக மீட்கப்பட்ட முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X