பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி சொத்து வரி வசூல் 'டல்': அலட்சிய அலுவலர்களுக்கு 'செம டோஸ்'

Added : செப் 16, 2020
Share
Advertisement

கோவை:கோவை மாநகராட்சியில், வரி வசூலில் பின்தங்கியுள்ள மண்டல உதவி வருவாய் அலுவலர்களுக்கு 'செம டோஸ்' விழுந்தது.கோவை மாநகராட்சிக்கு சொத்து வரியே பிரதான வருவாய். ஏப்., - செப்., மற்றும் அக்., - மார்ச் என, ஆறு மாதத்துக்கு ஒருமுறை சொத்து வரி வசூலிக்க வேண்டும். முதல் அரையாண்டு காலம், வரும், 30ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. ஆனால், 35 சதவீதமே வசூலாகியிருக்கிறது.வரி வருவாயை கொண்டே, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் சம்பளம் கொடுக்க, நிதி நெருக்கடி ஏற்பட்டது. கடைசி நேரத்தில் வரி வசூல் துரிதப்படுத்தப்பட்டு, சம்பளம் வழங்கப்பட்டது.அதுபோன்ற நிலைமை தொடரக் கூடாது என்பதற்காகவும், வரி வசூலை முடுக்கி விடவும், மண்டல உதவி கமிஷனர்கள் மற்றும் உதவி வருவாய் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று நடந்தது. கமிஷனர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். துணை கமிஷனர் மதுராந்தகி முன்னிலை வகித்தார்.மாநகராட்சியின் மொத்த வரி வருவாய் நிலவரங்களை கேட்டறிந்த கமிஷனர், ''நிலுவை விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் கிடப்பில் போடக்கூடாது; மக்களை அலைக்கழிக்கக் கூடாது,'' என, அறிவுரை வழங்கினார்.துணை கமிஷனர் மதுராந்தகி பேசுகையில், ''கடந்த இரு நாட்களாக, நாளொன்றுக்கு, ஒரு கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. இதேபோல், தினமும் வசூலிக்க வேண்டும்; எக்காரணம் கொண்டும் தொய்வு வரக்கூடாது,'' என்றார்.வரி வசூலில் பின்தங்கியுள்ள, இரு மண்டல உதவி வருவாய் அலுவலர்களுக்கு, 'செம டோஸ்' விழுந்தது.கோவை மாநகராட்சிக்கு சொத்து வரியே பிரதான வருவாய். ஏப்., - செப்., மற்றும் அக்., - மார்ச் என, ஆறு மாதத்துக்கு ஒருமுறை சொத்து வரி வசூலிக்க வேண்டும். முதல் அரையாண்டு காலம், வரும், 30ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. ஆனால், 35 சதவீதமே வசூலாகியிருக்கிறது. வரி வசூலில் பின்தங்கியுள்ள, இரு மண்டல உதவி வருவாய் அலுவலர்களுக்கு, 'செம டோஸ்' விழுந்தது.ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரைமாநகராட்சி கிழக்கு மண்டலத்தில், பொதுமக்களிடம் வசூலித்த வரி தொகையை, பில் கலெக்டர் யுவராஜ், மாநகராட்சியில் செலுத்தாமல், முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதை உயதிகாரிகள் கண்டுபிடித்ததும், 3.20 லட்சம் ரூபாயை செலுத்தினார். அதிகாரிகள் கண்டுபிடிக்கும் வரை, வரி தொகையை தவறாக பயன்படுத்திய குற்றத்துக்காக, அவர் மீது ரீதியாக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, உதவி கமிஷனர் முருகன் பரிந்துரைத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X