அருண்பிரகாஷ் கொலை நடந்தது ஏன்: ராமநாதபுரம் எஸ்.பி., கார்த்திக் விளக்கம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அருண்பிரகாஷ் கொலை நடந்தது ஏன்: ராமநாதபுரம் எஸ்.பி., கார்த்திக் விளக்கம்

Added : செப் 16, 2020
Share

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருண் பிரகாஷ் 24, கொலை முன்பகையால் நடந்துள்ளது என மாவட்ட எஸ்.பி., கார்த்திக் விளக்கமளித்தார்.

அவர் கூறியிருப்பதாவது:ராமநாதபுரம் வசந்த நகரில் ஆக.,31ல் அருண்பிரகாஷ் 24, யோகேஸ்வரன் 20, ஒரு கும்பலால் கத்தியால் குத்தப்பட்டனர். இதில் அருண்பிரகாஷ் இறந்தார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

ராமநாதபுரம் பாம்பூரணி சேக் என்ற லெப்ட் சேக் 24, மருதுபாண்டியர் நகர் சதாம் உசேன் 21, பாரதி நகர் முகமது அஜிஸ் 21, ஓம்சக்தி நகர் காசிம் ரகுமான் 24, ஆகியோர் திருச்சி லால்குடி நீதிமன்றத்தில் செப்.,2ல் சரணடைந்தனர். 3ந்தேதி கடலாடி நீதிமன்றத்தில் சின்னக்கடை ராசிக் அலி 23, அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் வைகை நகர் சரவணக்குமார் 24, விஜய் 22, சரணடைந்தனர்.

இவர்களை போலீஸ் காவலில் விசாரித்தபோது ஹரிஹரன் கைது செய்யப்பட்டார். விசாரணையில், ஆக.,30 மதியம் 12:00 மணிக்கு வசந்தநகர் பாத்திரக்கடை அருகே அருண்பிரகாஷ், சரத்குமார், பிரபு, பாண்டியராஜன், காமாட்சி, யோகேஸ்வரன் ஆகியோர் நடந்து சென்றபோது சரவணன், சபீக் ரகுமான் எதிரே வந்தனர். முன்பகை இருந்ததால், எங்க ஏரியாவிற்கு ஏன் வருகிறீர்கள்' எனக்கேட்டு இருவரையும் காமாட்சி தாக்கினார்.

இதற்கு பழிவாங்கும் வகையில் காமாட்சியை தாக்க லெப்ட் சேக், விஜய் உள்ளிட்டோர் வந்தனர். காமாட்சி தப்பவே, அவருடன் இருந்த அருண் பிரகாஷ், யோகேஸ்வரனை கத்தியால் குத்தினர். இதில் அருண் பிரகாஷ் இறந்தார்.இந்த வழக்கில் மேலும் ஏழு பேரை கைது செய்ய ராமநாதபுரம் டி.எஸ்.பி., வெள்ளத்துரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.---

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X