பொது செய்தி

தமிழ்நாடு

15 டி.எம்.சி.,யானது காவிரி நீர் பாக்கி

Added : செப் 16, 2020
Share
Advertisement

சென்னை:கர்நாடக அரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீர் பாக்கி, 15 டி.எம்.சி.,யாக அதிகரித்து உள்ளது.

தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்துள்ளது.அதன்படி, ஆண்டுதோறும் நீர் வழங்கும் தவணை காலம், ஜூனில் துவங்கும். ஜூனில், 9.19 டி.எம்.சி., நீரை, கர்நாடக அரசு திறந்திருக்க வேண்டும்.

ஆனால், 6.20 டி.எம்.சி., மட்டுமே வழங்கப்பட்டது. ஜூலையில், 31.2 டி.எம்.சி.,க்கு பதிலாக, 11.3 டி.எம்.சி., திறக்கப்பட்டது. ஆகஸ்டில், 45.9 டி.எம்.சி., திறந்திருக்க வேண்டும். அங்கு மழை கொட்டியதால், அதிகபட்சமாக, 57.4 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்டது. இந்த மாதம், 36.76 டி.எம்.சி., திறக்கப்பட வேண்டும். 14ம் தேதி வரை, 17.5 டி.எம்.சி.,க்கு பதிலாக, 14.1 டி.எம்.சி., மட்டுமே வந்து சேர்ந்துள்ளது. அதன்படி, கர்நாடகாவின் காவிரி நீர் பாக்கி, 14.7 டி.எம்.சி.,யாக அதிகரித்துள்ளது.

வரும், 25ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடக்கவுள்ள நிலையில், இதுகுறித்து கேள்வி எழுப்ப, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X