பொது செய்தி

தமிழ்நாடு

பிரஸ்காலனியில் கேந்திரிய வித்யாலயா! அரசுக்கு பரிந்துரைக்க பா.ஜ, செயற்குழுவில் தீர்மானம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

மத்திய அரசின் மும்மொழி கொள்கையை, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.,செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பிரிவில் உள்ள, தனியார் மண்டபத்தில் கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., கட்சியின், செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், பிரஸ்காலனியில் உள்ள அரசு நிலத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளியை நிறுவ, மத்திய அரசுக்கு பரிந்துரைப்பது, 1962ம் ஆண்டு நேரு பிரதமராக இருந்தபோது, சீனாவிடம் இழந்த பகுதிகளை தற்போதைய பா.ஜ., அரசு மீட்டெடுக்க, எடுக்கும் ராஜாங்க மற்றும் ராணுவ ரீதியான நடவடிக்கைகளுக்கு, முழு ஆதரவு அளிப்பது, அரசு கட்டுப்பாட்டில் உள்ள இந்து கோவில் வருமானத்தை, இந்து சமுதாயத்தின் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்த, மாநில அரசை கேட்டுக்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதை தவிர, அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும், விவசாயிகளின் ஊக்க நிதி திட்டத்தில் முறைகேடு செய்தவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவிநாசி மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிகளை, மறுசீரமைப்பு செய்ய வேண்டும், அன்னூரில் தாலுகா நீதிமன்றம் அமைக்க வேண்டும், மாநில அரசு, புதிய தொழில் நிறுவனங்கள், தொடங்குவதற்கான விதிமுறைகளை எளிதாக மாற்றி அமைக்க வேண்டும், சமூக வலைதளங்களில் இந்து கடவுள்களை இழிவு படுத்தி, தேசத்தின் இறையாண்மைக்கு எதிராக பதிவிடும் நபர்கள் மீது, சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X