அரசியல் செய்தி

தமிழ்நாடு

இன்று இலவச இன்சூரன்ஸ், அன்னதானம்: மோடி பிறந்தநாளில் பா.ஜ.,கொண்டாட்டம்

Added : செப் 16, 2020
Share
Advertisement

பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, ரத்ததானம், இன்சூரன்ஸ் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை, இன்று பா.ஜ., இளைஞரணி நடத்துகிறது.பிரதமர் மோடியின், 70வது பிறந்தநாள், சேவா வாரமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன் படி கோவையில் கடந்த 15ம் தேதியிலிருந்து, 20ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இது குறித்து, பா.ஜ., மாநில இளைஞரணி தலைவர் பிரீத்திலட்சுமி கூறியதாவது:பிரதமர் மோடியின் பிறந்தநாளை, பிரமாண்டமாக கொண்டாடி வருகிறோம். உடல் ஆரோக்கியத்தை வளர்க்கும் ரத்ததானத்தை இளைஞர்கள், 70 பேர் நாளை(இன்று) வழங்குகின்றனர்.சுற்றுச்சூழலை பாதுகாக்கும், விரைவாக வளர்ந்து பலனுக்கு வரும் வாகை, வேம்பு, அரசு, பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகளை நடுகிறோம்.நோய்த் தொற்று பரவும், 70 இடங்களை கண்டறிந்து, இளைஞர் அணியினர் கபசுர குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் வில்லைகளை, மக்களுக்கு வழங்குகிறோம்.கட்சியை பலப்படுத்தும் வகையில், 70 இடங்களில் கட்சி கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்று விழா நடத்த திட்டமிட்டுள்ளோம். கோவில்களில் பிரதமர் மோடி பெயரில், சிறப்பு பூஜை நடத்தி அன்னதானம் செய்ய உள்ளோம்.பிரதமரின் விபத்து காப்பீட்டுத்திட்டத்தில், இணையாதவர்களை கண்டறிந்து, இலவசமாக நாளை(இன்று) இன்சூரன்ஸ் செய்து கொடுக்கிறோம். குடியிருப்பு பகுதிகளில் மக்களின் தேவையை அறிந்து, பொதுப்பயன்பாட்டிற்கான பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X