பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜி., தர வரிசை 25ம் தேதி வெளியீடு

Added : செப் 17, 2020
Share
Advertisement

சென்னை:'இன்று வெளியிடப்படுவதாக இருந்த, இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கான, தர வரிசை பட்டியல், வரும், 25ம் தேதி வெளியிடப்படும்' என, உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகள், அண்ணா பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரிகள், அண்ணாமலை பல்கலை மற்றும் சுய நிதி இன்ஜினியரிங் கல்லுாரிகளில், சேர விரும்பும் மாணவர்களுக்கான, இணையதள பதிவு முடிந்து, பதிவு செய்த அனைத்து மாணவர்களுக்கும், ஆக., ௨௬ல், ரேண்டம் எண் வழங்கப்பட்டது.

தொற்று காரணமாக, மாணவர்களை நேரில் அழைக்காமல், பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்டு வருகிறது. இன்னும் சில மாணவர்கள், சரியான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய, அவகாசம் கோரியுள்ளனர். எனவே, மாணவர்கள் நலன் கருதி, இன்று வெளியிட வேண்டிய தரவரிசை பட்டியல், வரும், 25ம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள், www.tneaonline.org என்ற இணையதளத்தில், தங்கள் அக்கவுண்டில் லாகின் செய்து, தங்கள் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். சந்தேகம் இருந்தால், 044 -- 2235 1014, 2235 1015 என்ற எண்களில் தொடர்பு கொண்டு, தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அன்பழகன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X