பொது செய்தி

தமிழ்நாடு

கடன் பெற இடைத்தரகரை நம்பாதீர்: சாலையோர வியாபாரிக்கு அறிவுரை

Added : செப் 17, 2020
Share
Advertisement

திருப்பூர்:'சாலையோர வியாபாரிகள் கடனுதவி பெற, இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்' என அதிகாரிகள் கூறினர்.கொரோனா பரவலால், வாழ்வாதாரம் இழந்த சாலையோர வியாபாரிகள், வாழ்வாதாரத்தை மீட்பதற்காக, வங்கிகள் மூலம் தலா, 10 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. மாநகராட்சி மூலம் பெறப்பட்ட தகுதியான மனுதாரர்களுக்கு, அனைத்து வங்கிகளும் விரைவில் கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கென மாநகராட்சி சார்பில், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறியதாவது:வியாபாரிகளுக்கு கடன் வழங்க விண்ணப்பம் பெறுவது தொடர்பாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். கடன்பெற விரும்பும் வியாபாரிகள், அந்தந்த பகுதி மாநகராட்சி கோட்ட உதவி ஆணையர், மகளிர் திட்ட அலுவலர்களை அணுகி, மனு அளிக்கலாம். விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பிணை இல்லா வங்கிக்கடனாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.பெற்ற கடனை ஓராண்டுக்குள் செலுத்த வேண்டும். முறையாக கடனை திருப்பிச்செலுத்தினால், ஏழு சதவீத வட்டி மானியம் கிடைக்கும். விண்ணப்பிப்போர், இடைத்தரகர்களை நம்பி ஏமாந்துவிடக்கூடாது. நேரடியாக அதிகாரிகளை அணுகி விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X