பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு தனிமையை விரும்புவோர் அதிகம்: கட்டுக்குள் இறப்பு விகிதம்

Added : செப் 17, 2020
Share
Advertisement

திருப்பூர்:தொற்று பரவல் அதிகரித்திருந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் வேகமாக குணமடைந்து வருகின்றனர் என, மாவட்ட நிர்வாகம் ஆறுதல் அளித்து வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், மாநகராட்சி, அவிநாசி, காங்கயம், தாராபுரம், பல்லடம் உடுமலை, திருப்பூர் தாலுகாக்களில், கொரோனா தொற்று பரவியுள்ளது.நேற்று நிலவரப்படி, பாதிப்பு, 5,349 ஆக உயர்ந்துள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, இ.எஸ்.ஐ., அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலைமாறி, மாவட்டத்தில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சிகிச்சை மையங்களில், நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.விருப்ப அடிப்படையில், பலர், சித்தா பிரிவிலும் சிகிச்சைக்கு சேருகின்றனர்.
கடந்த இரு வாரமாக, தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.'இதுவரை, தொற்று சிகிச்சை பெற்று வந்த, 5,349 பேரில், 68 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்; 34 சதவீதம் பேர் சிகிச்சை பெறுகின்றனர். சர்க்கரை, சிறுநீரக கோளாறு, இதய கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த, முதியோரில், இரண்டு சதவீதம் பேர் இறந்துள்ளனர்.சில மாதமாக, 64 சதவீதமாக இருந்த குணமடைவோர் சதவிகிதம், தற்போது, 68ஆக உயர்ந்துள்ளது' என, மாவட்ட நிர்வாகம் கணக்கு சொல்கிறது.கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறுகையில், ''மாவட்டத்தில், தொற்று பரவல் அதிகரித்துள்ள நேரத்திலும், சிறப்பான சிகிச்சையால், பலரும் வேகமாக குணமடைகின்றனர். தொற்று, பலமடங்கு அதிகரித்தாலும், உயிரிழப்பு கட்டுக்குள் உள்ளது.மாவட்டத்தில், மொத்த பாதிப்பில், இரண்டு சதவீதத்திற்கு குறைவானர்களே இறந்துள்ளனர். தொற்றுபாதித்தவர், தனித்திருந்தாலே, தொற்று பரவாமல் தடுக்க முடியும்.
பொதுமக்கள், முககவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவதன் மூலம், கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்,'' என்றார்.இப்படித்தான் இருக்கணும்...சுகாதார துறையினர் கூறியதாவது:வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வோர் சரியான சரிவிகித உணவு, எட்டு மணி நேர உறக்கம், தேவையான நீர்ச்சத்து, நேர்மறை எண்ணங்களை வளர்த்தல் உள்ளிட்டவற்றை பின்பற்றினால், விரைந்து குணமடையலாம். நம்மை சார்ந்தோருக்கும், அந்த தொற்று ஏற்படாமல் இருக்க ஒத்துழைக்க வேண்டும்.
குறிப்பாக, 55 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, நுரையீரல் அடைப்பு நோய் என, தொற்றா நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், டாக்டர் ஆலோசனையுடன் சிறப்பு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். உடலில், ஆக்சிஜன் அளவை, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.மழைபெய்து வருவதால், சீதோஷ்ண நிலையில் ஏற்படும் மாற்றத்தாலும், சளி உள்ளிட்ட தொந்தரவு ஏற்படும். குளிர்ச்சியான மற்றும் துரித உணவு தவிர்ப்பது நல்லது. மதுப்பழக்கம், நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும் என்பதால், அதை தவிர்க்க வேண்டும். யோகாசனம் உள்ளிட்ட எளிமையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.இவ்வாறு, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X