பொது செய்தி

தமிழ்நாடு

பண்ணைக்குட்டை அமைக்க ரூ.22.50 லட்சம் மானியம் 'ரெடி'

Added : செப் 17, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், பண்ணைக்குட்டை அமைக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க, 22.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.விளைநிலத்தில் சேகரமாகும் மழைநீரை வீணாக்காமல், நிலத்துக்குள் செறிவூட்ட, வேளாண் துறை ஊக்குவித்து வருகிறது. தேசிய வேலை உறுதி திட்டத்தில், மண் வரப்பு அமைக்கும் பணிக்கும், தென்னை மரத்துக்கு பாத்தி அமைக்கும் பணிக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.வேளாண்துறை மற்றும் தோட்டகலை துறை சார்பில், பண்ணை குட்டை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்துக்கு, 30 பண்ணைக்குட்டை அமைக்க, 22.50 லட்சம் ரூபாய், தோட்டக்கலை துறை ஒதுக்கியுள்ளது. பண்ணை குட்டை அமைப்பதற்காகும், 1.50 லட்சம் ரூபாய் செலவில், 50 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில்,'தாராபுரம், காங்கயம், மூலனுார், வெள்ளகோவில் ஒன்றியங்களுக்கு மூன்று, பிற ஒன்றியங்களுக்கு இரண்டு, பண்ணைக்குட்டை ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், 30 மீ., நீள, அகலத்தில், 3 மீ., ஆழத்தில், பண்ணைக்குட்டை அமைக்கலாம். பாலிதீன் உதவியுடன், தண்ணீர் சேகரிக்கும் வகையில், குட்டை வடிவமைக்கப்படும்; தேங்கும் நீரை, மோட்டார் மூலம் உறிஞ்சி பயிர்களுக்கு பாய்ச்சலாம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X