புதிய கல்விக் கொள்கை 2 ஆயிரம் ஆண்டுகள் பின்நோக்கியது - மல்லிகார்ஜூன கார்கே

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (52)
Share
Advertisement

புது டில்லி: குழந்தைகளை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதற்கும், திட்டமிடுவதற்கும் மாற்றாக புதிய கல்விக் கொள்கை 2 ஆயிரம் ஆண்டுகள் பின்நோக்கி உள்ளது என காங்., எம்.பி., மல்லிகார்ஜூன கார்கே பார்லியில் பேசினார்.latest tamil news
1986-ல் கடைசியாக கல்வி கொள்கை வகுக்கப்பட்டது. அதன் பிறகு சுமார் 36 ஆண்டுகள் கழித்து தற்போது புதிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இது பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வியில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி., மல்லிகார்ஜூன கார்கே, புதிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்த்து பேசினார்.

இன்றைய நேரமில்லா நேரத்தின் போது இப்பிரச்னையை முன் வைத்து அவர் பேசியதாவது: கல்வி என்பது அரசியலமைப்பு கொள்கையின் அடிப்படையில் இருக்க வேண்டும். பழங்கால கலாசார மதிப்புகள் கொண்டதாக இருக்க கூடாது. மாநில மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட மத நம்பிகை களுக்கானதாக இருக்கக் கூடாது. அரசியலமைப்பின் பிரிவு 28(1) அதையே கூறுகிறது.


latest tamil newsஅங்கன்வாடி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க சரியான கொள்கை வரையறுக்கப்படவில்லை. இதனால் நகர்புற மற்றும் கிராமப்புற ஏழைக் குழந்தைகள் ஒன்றாம் வகுப்பு சேரும் போது பாதிக்கப்படுவார்கள். 10 ஆம் வகுப்புக்குப் பிறகு கிட்டத்தட்ட 50 சதவீத மாணவர்கள் பள்ளிகளை விட்டு வெளியேறுகிறார்கள். அதனை குறைக்க எந்த திட்டமும் இல்லை. வெளியேறும் மாணவர்களில் 32.4 % பேர் தலித்துகள், 25.7% பேர் சிறுபான்மையினர் மற்றும் 16.4% பேர் பழங்குடியினர். ஆசிரியர்களுக்கு ஏற்கனவே தேர்தல்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தடுப்பூசி போடுவது போன்ற சுமைகள் உள்ளன.

இந்திய கலாச்சாரத்தை மாணவர்கள் தங்கள் மொழி மற்றும் இலக்கிய வகுப்புகள் மூலம் கற்க வேண்டும். சமஸ்கிருதம் இந்தி போன்ற ஒற்றை கலாசாரத்தை அரசு ஊக்குவித்தால் பின் தங்கிய பகுதி மாணவர்கள் நவீன கல்வியில் இருந்து விலகிச் செல்வார்கள். இவ்வாறு பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
17-செப்-202020:27:14 IST Report Abuse
Tamilnesan எப்படி? நீங்கள் நாடாளுமன்றத்தில் நாட்டில் தலித்துகளை வாழ விடுங்கள் என்று சொல்லி, பிறகு பிரதமர் உங்கள் பல்லாயிரம் கோடிகள் சொத்துக்களை பட்டியலிட்டு உங்களை நாறடித்தாரே.......அப்படி நினைத்தீர்களா புதிய கல்வி கொள்கை. பல குழுக்கள் தீர ஆராய்ந்து நடைமுறைக்கு வந்துள்ளது. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசி திரும்ப வாங்கி கட்டிக்கொள்ளாதீர்கள்.
Rate this:
Cancel
kanisha - CHENNai,இந்தியா
17-செப்-202018:17:26 IST Report Abuse
kanisha இந்த அதிமேதாவிகல் அனைவருமே இந்த அடிமைகளின் கூடாரத்தினில் இருந்துகொண்டு வீரவசனம் பேசுவார்கள் அல்லது அடுத்தவனை குறை கூறுவார்கள்
Rate this:
Cancel
Davamani Arumuga Gounder - Gandhipuram Sendamangalam Namakkal,இந்தியா
17-செப்-202018:08:55 IST Report Abuse
Davamani Arumuga Gounder .. இப்படீல்லாம் பேசினா மட்டும் .. காரியக்கமிட்டியிலிருந்து விரட்டிய காங்கிரஸ் உங்களை மீண்டும் காரியக் கமிட்டியில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளுமாக்கும் ? .. ம்ம்..ஹூஹும்.. மீண்டும் சேர்த்துக்கொள்ள இத்தாலி குடும்பத்தினர் விடமாட்டார்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X