பொது செய்தி

தமிழ்நாடு

புதிய குடிநீர் திட்டப்பணி குழாய் இணைப்பு துவக்கம்

Added : செப் 17, 2020
Share
Advertisement
 புதிய குடிநீர் திட்டப்பணி குழாய் இணைப்பு துவக்கம்

திருப்பூர்:புதிய குடிநீர் திட்டத்தில், மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கான, பிரதான குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில், நான்காவது குடிநீர் திட்ட பணி, மத்திய அரசின் 'அம்ரூத்' திட்டத்தில் நடந்து வருகிறது. மேட்டுப்பாளையம், பவானி ஆற்றிலிருந்து குழாய் பதித்து, அன்னுார் அருகே, சுத்திகரிப்பு செய்து, ராட்சத குழாய் மூலம், திருப்பூர் நகருக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது.இத்திட்டத்தில், நகரின் பல்வேறு முக்கிய பகுதிகள் மற்றும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட முந்தைய ஊராட்சி பகுதிகள் பயன்பெற உள்ளன.இதற்காக, மாநகராட்சி பகுதியில், 27 இடங்களில் மேல்நிலை தொட்டி அமைத்து, பகுதி வாரியாக குடிநீர் சப்ளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 'அம்ரூத்' திட்டத்தில், சந்திராபுரம் பகுதியில், 10 லட்சம் மற்றும், 7.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரு மேல்நிலை தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த இரு மாதம் முன், இந்த மேல்நிலை தொட்டிகளில், நீர் நிரப்பி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இந்த தொட்டிகளுக்கு, குடிநீர் கொண்டு செல்லும் வகையில், பிரதான குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X