பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிகிச்சையில் 46 ஆயிரம் பேர்

Added : செப் 17, 2020
Share
Advertisement

சென்னை:கொரோனா பாதித்தவர்களில், 46 ஆயிரத்து, 633 பேர் மட்டுமே, தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 170 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று, 84 ஆயிரத்து, 567 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

அதில், சென்னையில், 983; கோவையில், 549 ; செங்கல்பட்டில், 319; திருவள்ளூரில், 282; சேலத்தில், 280; கடலுாரில், 263 பேர் உட்பட, மாநிலம் முழுதும், 5,652 பேருக்கு தொற்று உறுதியானது. மாநிலத்தில், நேற்று வரை, 61.33 லட்சம் மாதிரிகளை பரிசோதித்ததில், 5 லட்சத்து, 19 ஆயிரத்து, 860 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில், 1 லட்சத்து, 51 ஆயிரத்து, 560; செங்கல்பட்டில், 31 ஆயிரத்து, 388; திருவள்ளூரில், 29 ஆயிரத்து, 198; கோவையில், 23 ஆயிரத்து, 702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பெற்று வந்தவர்களில், 5,768 பேர், நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களுடன், நான்கு லட்சத்து, 64 ஆயிரத்து, 668 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். தற்போது, 46 ஆயிரத்து, 633 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சில தினங்களில் இறந்தவர்களில், 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து இதுவரை, 8,559 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

மாவட்டம் பாதிப்பு குணம் அடைந்தோர் இறப்பு

அரியலுார் 3,343 3,117 37

செங்கல்பட்டு 31,388 28,677 496

சென்னை 1,51,560 1,38,714 3,013

கோவை 23,702 19,900 365

கடலுார் 17,097 14,493 189

தர்மபுரி 2,322 1,424 21

திண்டுக்கல் 8,065 7,242 151

ஈரோடு 4,903 3,817 64

கள்ளக்குறிச்சி 8,308 7,086 90

காஞ்சிபுரம் 19,959 18,339 288

கன்னியாகுமரி 11,311 10,257 210

கரூர் 2,327 1,866 33

கிருஷ்ணகிரி 3,395 2,503 45

மதுரை 15,578 14,405 374

நாகை 4,390 3,242 71

நாமக்கல் 3,673 2,698 53

நீலகிரி 2,596 1,956 17

பெரம்பலுார் 1,597 1,469 19

புதுக்கோட்டை 7,721 6,771 122

ராமநாதபுரம் 5,269 4,879 114

ராணிப்பேட்டை 12,364 11,623 145

சேலம் 15,341 12,876 245

சிவகங்கை 4,625 4,268 114

தென்காசி 6,467 5,800 122

தஞ்சாவூர் 8,751 7,652 135

தேனி 13,965 13,098 162

திருப்பத்துார் 3,951 3,258 78

திருவள்ளூர் 29,198 26,645 498

திருவண்ணாமலை 13,642 12,059 202

திருவாரூர் 5,678 4,867 65

துாத்துக்குடி 12,543 11,660 119

திருநெல்வேலி 11,429 10,183 192

திருப்பூர் 5,349 3,625 87

திருச்சி 9,114 8,113 134

வேலுார் 13,019 11,742 197

விழுப்புரம் 9,847 8,889 86

விருதுநகர் 13,817 13,244 205

வெளிநாட்டில் இருந்து வந்தோர் 924 918 1

உள்நாட்டு விமான பயணியர் 904 867 0

ரயில் பயணியர் 428 426 0

மொத்தம் 5,19,860 4,64,668 8,559

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X