பொது செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க எஸ்.பி.ஐ., புதிய முறை

Added : செப் 17, 2020
Share
Advertisement

சென்னை:ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண்ணை குறிப்பிட்டு, ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுக்கும் முறை, எஸ்.பி.ஐ., என்ற, பாரத ஸ்டேட் வங்கியில், நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து, எஸ்.பி.ஐ., வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏ.டி.எம்., பண மோசடிகளை தடுக்க, எஸ்.பி.ஐ., பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, ஓ.டி.பி., என்ற, ஒருமுறை ரகசிய குறியீட்டை பயன்படுத்தி, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் சேவையை, ஜன., 1 முதல் அறிமுகப்படுத்தியது.

இந்த சேவையை பயன்படுத்தி, இரவு, 8:00 முதல், காலை, 8:00 மணி வரை மட்டுமே பணம் எடுக்க முடியும். தற்போது, இந்த சேவையை பயன்படுத்தி, 24 மணி நேரமும் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சேவை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

எஸ்.பி.ஐ., டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், அந்த வங்கியின், ஏ.டி.எம்., மையத்துக்கு சென்று, தங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் எண்ணிற்கு வரும், ஓ.டி.பி., எண் மற்றும், டெபிட் கார்டின், பின் நம்பரை பயன்படுத்தி பணம் எடுக்கலாம்.

எஸ்.பி.ஐ., வங்கியின், ஏ.டி.எம்., மையங்களில் மட்டுமே, இந்த சேவை தற்போது பயன்படுத்த முடியும். எனவே, இதுவரை தங்கள் வங்கி கணக்குடன், மொபைல் போன் எண்ணை இணைக்காத வாடிக்கையாளர்கள், உடனடியாக இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X