பொது செய்தி

தமிழ்நாடு

நவீன தொழில்நுட்பத்தில் நடவு பணி

Added : செப் 17, 2020
Share
Advertisement
 நவீன தொழில்நுட்பத்தில் நடவு பணி

திருப்பூர், செப். 17-

'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தில், மரம் நடும் பணிக்காக வாங்கப்பட்ட, புதிய டிராக்டர் நேற்று பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டம், 2 லட்சம் மரக்கன்று நடவு என்ற இலக்குடன், வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை, 65 ஆயிரத்துக்கும் அதிகமான மரக்கன்று நடப்பட்டுள்ளன. ஆறாவது திட்டத்தின், 42வது நிகழ்ச்சி, காங்கயத்தில் நடந்தது.குங்காருபாளையம், வடசின்னாரிபாளையம், வளவாநல்லுார் கிராமம், கொடுவாய் ரோட்டில் உள்ள, 'கிளாசிக் காயர்ஸ் இந்தியா' நிறுவன வளாகத்தில், மரக்கன்று நடப்பட்டன. காங்கயம் டி.எஸ்.பி., தனராசு, மரக்கன்று நடும் பணியையும், குழி எடுக்கும் டிராக்டர் பயன்பாட்டையும் துவக்கி வைத்தார். உரிமையாளர்கள் பாலசுப்பிரமணியன், சரண்குமார், சங்கீதா, அபியக், ராஜாமணி, 'துளிகள்' அமைப்பு நிர்வாகிகள், வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் பங்கேற்றனர்.குழி எடுக்கும் செலவை குறைக்க, புதிய ரக 'டிராக்டர்' வாகனம் வாங்கப்பட்டு, நேற்று முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.'இதன்மூலம், குழி எடுக்க செலவு குறையும்; பசுமையை வளர்க்கும் இத்திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்பும் விவசாயிகள், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்' என, வனத்துக்குள் திருப்பூர் திட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X