பஸ் போக்குவரத்து வாபஸ்: பயணிகள் 'அப்செட்'

Added : செப் 17, 2020
Share
Advertisement

வெள்ளகோவில்:ஈரோடு செல்ல பஸ்ஸில் அமர்ந்திருந்த, 10 பயணிகளை இறக்கிவிட்டு, பணிமனைக்கு திரும்பிய அரசு போக்குவரத்து பஸ்சால், பயணிகள் அதிருப்தியடைந்தனர்.வெள்ளகோவில் புது பஸ் ஸ்டாண்டில், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, ஈரோடு செல்லும் அரசு போக்குவரத்து கழக பஸ்சில், 10 பயணிகள் மட்டுமே அமர்ந்திருந்தனர்.இதற்கிடையில், திடீரென 'டிரிப்' ரத்து செய்யப்படுவதாக கூறி, பயணிகளை இறக்கிவிட்டு, பஸ் பணிமனைக்கு சென்றது.போக்குவரத்து கழக அலுவலர்களிடம் முறையிட்ட போது, '30 பயணிகள் இருந்தால் மட்டுமே, ஈரோட்டுக்கு இயக்க முடியும்' என கூறியுள்ளனர். பஸ்சில் இருந்து இறக்கி விடப்பட்ட பயணிகள், செய்வதறியாது திகைத்து நின்றனர். பின், அவ்வழியாக சென்ற வேறு பஸ்சில் பயணித்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X