பத்திரப்பதிவில் முறைகேடு புகார்: விசாரணையில் சுணக்கம்

Added : செப் 17, 2020
Share
Advertisement

பல்லடம்:'பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்து வரும் ஊழல் தொடர்பாக, டி.ஐ.ஜி.,யை சந்தித்து, முறையிடுவது' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பல்லடம், பத்திரப்பதிவு அலுவலகத்தில், ஊழல் மற்றும் முறைகேடு அதிகரிப்பதாக, தொடர்ந்து புகார் எழுந்தது. இதுதொடர்பாக, பல்லடத்தில், அரசியல் கட்சியினர், ஆலோசனை கூட்டம் நடத்தி, 'ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என, மாவட்ட பத்திரப்பதிவு அலுவலரிடம் மனு வழங்கினர்.அவர்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க, கூடுதல் பதிவாளர் நியமிக்கப்பட்டார். புகார் மீது விளக்கம் அளிக்குமாறு, பல்லடம் பத்திரப்பதிவு அலுவலர் பாலசுப்பிரமணியத்துக்கு, அவர் கடிதம் அனுப்பிய நிலையில், மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர் விடுப்பில் சென்றார்.இதனால், அதிருப்தியடைந்த, தி.மு.க.,-காங்.,-மா.கம்யூ.,-இ.கம்யூ.,-ம.தி.மு.க.,-தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், நேற்று, மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில், 'பத்திரப்பதிவு டி.ஐ.ஜி.,யை சந்தித்து, ஊழல் குறித்து புகார் அளிப்பது எனவும், நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், விவசாயிகள், பொதுமக்களை திரட்டி, பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிடுவது' எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X