சர்வதேச குறும்பட விழா; திருப்பூர் சிறுமிக்கு விருது

Added : செப் 17, 2020
Share
Advertisement
 சர்வதேச குறும்பட விழா; திருப்பூர் சிறுமிக்கு விருது

திருப்பூர்:அமெரிக்காவில் நடந்த, சர்வதேச குறும்பட விழாவில், திருப்பூர் சிறுமிக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது கிடைத்துள்ளது.திருப்பூர், அங்கேரிபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள், மஹாஸ்வேதா. வெங்கமேடு பகுதியிலுள்ள தனியார் பள்ளியில்,5-ம் வகுப்பு படிக்கிறார். இவர், 'கிராண்மா டாய்' என்ற குறும்படத்தில் நடித்தார்.அனாதை இல்லத்தில் வளரும் கதாபாத்திரம் ஏற்றிருந்தார்.
இப்படம் அமெரிக்காவின், லாஸ் வெகாஸில் நடந்த, சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்து குறும்படத்துக்கான விருது பெற்றுள்ளது.சிறுமி, மஹாஸ்வேதா, சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டு, அதற்கான விருது பெற்றார்.அவரது தந்தை கூறுகையில், ''விருது தேர்வில், 100 நாடுகளை சேர்ந்த குறும்படங்கள் போட்டியிட்டன. அதில், 'கிராண்மா டாய்' என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்கு, ஸ்வேதாவிற்கு, 'பிரஸ்டீஜ்' விருது கிடைத்துள்ளது. இது, 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில், இவருக்கு கிடைத்த இரண்டாவது சர்வதேச விருது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X