அரசியல் செய்தி

தமிழ்நாடு

வரதட்சணை கொடுமைக்கு ' 10 ஆண்டு' முதல்வர் இ.பி.எஸ்., அறிவிப்பு

Added : செப் 17, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 வரதட்சணை கொடுமைக்கு ' 10 ஆண்டு' முதல்வர் இ.பி.எஸ்., அறிவிப்பு

சென்னை:''பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை, மேலும் கடுமையாக்கிட, மத்திய அரசின் அனுமதி பெற்று, சட்ட திருத்தங்கள் கொண்டு வர, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று சட்டசபையில் அறிவித்தார்.

சட்டசபையில், 110 விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

* பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான, பாதுகாப்பை மேலும் உறுதி செய்ய, 1860ம் ஆண்டு, இந்திய தண்டனை சட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை, மேலும் கடுமையாக்க, மத்திய அரசின் அனுமதியுடன், சட்ட திருத்தங்கள் கொண்டு வர, நடவடிக்கை எடுக்கப்படும்

* 'பிரிவு - 304 பி'யில், வரதட்சணை கொடுமை தொடர்பான மரணங்களுக்கு, தற்போது வழங்கப்படும், குறைந்தபட்சம் ஏழு ஆண்டு சிறை தண்டனை, ௧௦ ஆண்டுகளாக உயர்த்தப்படும்

* 'பிரிவு - 354 -பி' குற்ற நோக்கத்துடன், பெண்களின் ஆடைகளை களைவதற்கு, தற்போது வழங்கப்படும், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, ஐந்து ஆண்டுகளாக்கப்படும். அதிகபட்சமாக வழங்கப்படும், ஏழு ஆண்டு சிறை தண்டனை, 10 ஆண்டுகளாக உயர்த்தப்படும்

* 'பிரிவு - 354 - டி'யில், தவறான குற்ற நோக்கத்துடன் பின் தொடர்ந்தால், இரண்டாம் முறையும் தொடர்ந்து குற்றமிழைத்தால், தற்போது வழங்கப்படும் ஐந்தாண்டு சிறை தண்டனை, அதிகபட்சமாக ஏழு ஆண்டுகளாக்க உயர்த்தப்படும்

* 'பிரிவு - 372'ல் பாலியல் தொழிலுக்காக, 18 வயதிற்குட்பட்ட நபர்களை, விற்பனை செய்தல். பிரிவு -- 373ல் பாலியல் தொழிலுக்காக, 18 வயதிற்கு உட்பட்ட நபர்களை, விலைக்கு வாங்குதலுக்கு, தற்போது வழங்கப்படும், 10 ஆண்டு அதிகபட்ச சிறை தண்டனையை, குறைந்தபட்சம் ஏழு ஆண்டு சிறை தண்டனை, அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்க, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

ஜெ., அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, என்றென்றும் அரணாக தொடர்ந்து நின்று, அவர்களை காக்கும்.இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
17-செப்-202015:39:50 IST Report Abuse
Swaminathan Chandramouli சிறார்களை கற்பழிக்கும் காமுகர்களுக்கு அவர்கள் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாலும் அவர்களுக்கு உரிய கடுங்காவல் தண்டனை கொடுக்க படவில்லை சிலர் முன் ஜாமீனில் வெளிய உலாவி வருகிறார்கள் , குரானா த்தொற்று ஆரம்பமானது முதல் லாக் டவுன் அமுலுக்கு வந்ததில் இருந்து ஏராளமான கொள்ளைகள் , கொலைகள் வழிப்பறி செய்து நகைகள் திருட்டு , தற்கொலைகள் இவை பெருகி விட்டன , அரசாங்கம் விழிப்புடன் இருந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் இதை விட இன்னும் மோசமான செயல்கள் நடக்கின்றன . தினமும் கஞ்சா கடத்தல், குட்கா கடத்தல் ஏராளமான கிலோ கணக்கில் நடை பெறுகின்றன ஆண்டவனே வந்தாலும் இவைகளை தடுக்க முடியாது போல
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
17-செப்-202007:51:40 IST Report Abuse
ravi வரதட்சணை கொடுமைக்கு சட்டம் போடும் எங்கள் எடப்பாடிக்கு எல்லா துறைகளிலும் கோடிக்கணக்கில் விளையாடும் லஞ்சத்திற்கு முடிவு கட்ட எண்ணம் வராதா? எந்த துறையில் ஊழல் இல்லை என்று அவர் சொல்வாரா? பிரதமரின் எல்லா திட்டங்களிலும் வானுயர ஊழல் நடக்கிறதே. இந்த ஊழல் பெருச்சாளிகளுக்கு மாநில சுயாட்சி கிடைத்தால் தமிழ்நாட்டை யாருக்காவது விற்கமாட்டார்களா? மக்களை பற்றி யார் கவலைப்பட்டார்கள். தேர்வே இல்லாமல் ஒரு படிப்பு, பிரேக் இல்லாத வாகனத்தை போல்தான். எல்லா மாணவர்களை மானாவாரியாக பாஸ் செய்யும் முதல்வர் இருக்கும் வரை தமிழ்நாட்டில் கல்வி உருப்படாது. மொத்தத்தில் திமுக அதிமுக இரண்டுமே தமிழ்நாட்டை சீரழித்துவிட்டன. 2021 இல் கான்-கிராஸ் திமுக அதிமுக கம்யூனிஸ்ட்ஸ் எல்லா கட்சிகளையும் வெளியில் தூக்கி எறியவேண்டும்.
Rate this:
Cancel
17-செப்-202007:12:44 IST Report Abuse
கொத்து பரோட்டா கோவிந்து இது போன்ற சட்டங்களை கொண்டுவந்து திமுகவை அழிக்கலாம் என்று பகல் கனவு காணாதீர்கள் முதல்வர் அவர்களே பிரியாணி தின்றுவிட்டு ..காசுக்கேட்டால் முகத்தில் குத்து விடும் எங்கள் தொண்டனை சிறையில் அடைக்க சட்டம் கொண்டுவர முடியுமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X