பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடையில் முக கவசம்: முதற்கட்டமாக, 5.29 லட்சம் தயார்

Added : செப் 17, 2020
Share
Advertisement
 ரேஷன் கடையில் முக கவசம்: முதற்கட்டமாக, 5.29 லட்சம் தயார்

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட, நகர்ப்புற ரேஷன் கடையில், இலவச முக கவச வினியோகம் துவங்கியது.மாநில அரசு, ரேஷன் கடை மூலம், இலவச முக கவசம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்துள்ளது. ரேஷன் கார்டில், இடம் பெற்றுள்ள நபருக்கு, தலா, இரண்டு முக கவசம் வழங்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில், மாநகராட்சி, ஐந்து நகராட்சிகள், 16 பேரூராட்சி மக்களுக்கு முதல்கட்டமாக, முககவசம் வழங்கப்படுகிறது. அதற்கென, 22.46 லட்சம் முக கவசத்துக்கு, சென்னையில் உள்ள நிறுவனத்திடம் 'ஆர்டர்' வழங்கப்பட்டது.கடந்த வாரம், முக கவசம், திருப்பூர் வந்து சேர்ந்தது; ஆய்வகத்தில், அதன் தரம், பரிசோதிக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று, முதல் ரேஷன் கடையில், வினியோகம் துவங்கியுள்ளது; அவை 'பிங்க்' நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ் கூறுகையில், ''நகர்ப்பகுதி ரேஷன் கடைகளில் வழங்க, முதல் கட்டமாக, 5.29 லட்சம் முக கவசம் வந்துள்ளன. தர பரிசோதனை செய்யப்பட்ட, 4.21 லட்சம் முக கவசம், உடனுக்குடன், ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.ரேஷன் கார்டில் உள்ள நபர்களுக்கு, தலா, இரண்டு முக கவசம் வழங்கப்படும். நகர்ப்பகுதி மக்களுக்கு வழங்கி முடித்தபின், கிராமப்புற மக்களுக்கு வழங்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X