பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி மாணவருக்கு கல்வி உதவி

Added : செப் 17, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிக்கை:அரசு மற்றும் உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மூன்றாமாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும், பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு, இலவச கல்வி திட்டத்தில், நிபந்தனையின்றி உதவித்தொகை வழங்கப்படுகிறது.முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு படிப்போரின் பெற்றோரது ஆண்டு வருமானம், 2 லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை கோரும் படிவங்களை, பயிலும் கல்வி நிலையத்திலேயே பெறலாம்.புதுப்பித்தல் விண்ணப்பங்களை, 10ம் தேதிக்குள்ளும், புதிய விண்ணப்பங்களை, 30ம் தேதிக்குள்ளும் பூர்த்தி செய்து சான்றிதழ்களுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில், ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு விவரம் சரியாக குறிப்பிடப்பட வேண்டும்.வரும், நவ., 15ம் தேதி துவங்கும், கல்வி உதவி இணையதளத்தில், டிச.,15ம் தேதிக்குள் புதுப்பித்தலுக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். வரும், டிச.,16 முதல், 2021 ஜன., 31 வரை, புதிய விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.மேலும், விவரங்களுக்கு, கலெக்டர் அலுவலக வளாகத்தின் முதல் தளத்தில் இயங்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுலவலகத்தை (எண்:116) அணுகலாம். www.tn.gov.in/bcmbcdept என்ற இணையதளத்திலும் விவரம் பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X