அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ., தொகுதி நிதி துரைமுருகன் கோரிக்கை

Added : செப் 17, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை:''தொகுதி மேம்பாட்டு நிதியில், 2 கோடி ரூபாயை, எவ்வித நிபந்தனையுமின்றி, எம்.எல்.ஏ.,க்கள் விரும்பும் பணிகளுக்கு ஒதுக்க வேண்டும்,'' என, எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் வலியுறுத்தினார்.

சட்டசபையில், நேற்று துரைமுருகன் பேசியதாவது:தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளில், இடைத்தேர்தல் நடந்து, புதிய எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒதுக்கப்பட்ட, தொகுதி மேம்பாட்டு நிதியை, அவர்கள் செலவழிக்கவில்லை. அதை, புதிய எம்.எல்.ஏ.,க்களிடம் வழங்க வேண்டும்.

தொகுதி மேம்பாட்டு நிதியில், எம்.எல்.ஏ.,க்களுக்கு, 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், 1 கோடி ரூபாயை, கொரோனா தடுப்பு பணிக்கு எடுத்துக் கொண்டீர்கள். மீதி, 2 கோடி ரூபாயில், மாவட்ட கலெக்டர், 25 லட்சம் ரூபாயை, அவர் கூறும் பணிக்கு ஒதுக்கும்படி கூறுகிறார். மீதமுள்ள பணத்தை செலவழிப்பதற்கும், பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் நெருங்குகிறது. எனவே, கொரோனா தடுப்பு பணிக்கு போக, மீதமுள்ள, 2 கோடி ரூபாயை, எம்.எல்.ஏ.,க்கள் விரும்பும் பணிக்கு செலவழிக்க, அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். அதற்கு பதில் அளித்த முதல்வர், உரிய நடவடிக்கை எடுப்பதாக, உறுதி அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
17-செப்-202015:09:00 IST Report Abuse
Baskar துறை அவர்கள் விரும்பும் பணிக்கு இரண்டு கோடி ஒதுக்க சொல்கிறீர்கள். இப்போ என்ன செலவு இருக்கிறது. ஒன்றுமே இல்லை. வேண்டுமானால் தேர்தல் செலவுக்கு பணம் தேவை என்று வாய் கூசாமல் கேளுங்கள்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-செப்-202013:21:16 IST Report Abuse
Bhaskaran துறையார் சொல்லிட்டார் தேர்தல் செலவுக்கு பணம் தேவை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X