காட்டு யானைகள் முகாம் :ஸ்தம்பித்தது வாகன போக்குவரத்து

Added : செப் 17, 2020
Share
Advertisement

குன்னுார்:குன்னுார்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை சாலையோர வனப்பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.இந்நிலையில், நேற்று மாலை, 4:00 மணி அளவில் மரப்பாலம் அருகே, ஒற்றை யானை சாலைக்குவந்தது.தகவலின் அடிப்படையில், வனச்சரகர் சசிகுமார், வேட்டை தடுப்பு காவலர்கள் லோகேஸ்வரன் மற்றும் பலர், வாகனங்களை தடுத்து நிறுத்தி, யானையை வனப்பகுதிக்குள் விரட்டமுயற்சித்தனர்.எனினும், வனத்துக்குள் செல்ல, வழியில்லாததால் நீண்ட துாரம் சாலையிலேயே நடந்து சென்றது. ஆங்காங்கே வாகனங்களை மறித்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அவ்வழியாக, இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினர், பைக்கை சாலையில் விட்டு ஓட்டம் பிடித்தனர். நீண்ட நேரத்துக்கு பின், மாலை, 5:00 மணிக்கு வனப்பகுதிக்குள் யானை சென்றது. வனத்துறையினர் கூறுகையில்,' இப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால், டிரைவர்கள், வாகனங்களை மித வேகத்தில் ஓட்ட வேண்டும்; யானைகள் சாலைக்கு வந்தால், வாகனங்களை நிறுத்த வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X