பொது செய்தி

தமிழ்நாடு

கூடலுாரில் ரூ.10.19 கோடியில் புதிய அரசு குடியிருப்பு பணி

Added : செப் 17, 2020
Share
Advertisement
 கூடலுாரில் ரூ.10.19 கோடியில் புதிய அரசு குடியிருப்பு பணி

கூடலுார்:கூடலூரில், 10.19 கோடி ரூபாய் செலவில், வீட்டு வசதி வாரியத்தின், புதிய குடியிருப்புகளை கட்டும் பணி, பூமிபூஜையுடன் துவங்கியது.நீலகிரி மாவட்டம், கூடலுார் மார்த்தோமா நகரில், தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமாக, 144 குடியிருப்புகள் உள்ளன. அதில், 60 வீடுகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதிகாரிகள் அந்த வீடுகளை ஆய்வு செய்து, அதனை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டுவதற்கு முடிவு செய்தனர். இதற்கான திட்ட அறிக்கைஅரசுக்கு அனுப்பப்பட்டது.இதை தொடர்ந்து, புதிய வீடுகள் கட்ட அரசு சார்பில், 10.19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் நேற்று, பூமி பூஜையுடன் துவங்கியது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார். உதவி செயற்பொறியாளர் கூறுகையில்,' இங்குள்ள கட்டடங்கள் இடிக்கப்பட்டு, புதிய குடியிருப்புகள் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது.இப்பணி ஒன்பது மாதங்களில் நிறைவு பெறும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X