வீட்டிற்குள் மழை நீர் :பழங்குடிகள் அவதி

Added : செப் 17, 2020
Share
Advertisement

பந்தலுார்:பந்தலுார் அருகே, பென்னை மாற்று குடியமர்வு திட்டத்தில், கட்டப்பட்ட வீடுகள் ஒழுகுவதால், பழங்குடியின மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.பந்தலுார் அருகே, முதுமலை புலிகள் காப்பகம் பெண்ணை வனப்பகுதியில் குடியிருந்த பழங்குடியின மக்களுக்கு, மாற்று குடியமர்வு திட்டத்தின் கீழ், தொகுப்பு வீடுகள் கட்டி தரப்பட்டது.தரமில்லாமல் கட்டப்பட்ட இந்த வீடுகளின் அடித்தளம் ஆட்டம் கண்டுள்ளது. மேற்கூரை முழுவதும் விரிசல் ஏற்பட்டு, வீடுகளுக்குள் மழைநீர் தேங்கி நிற்கிறது.துணிகள் மற்றும் பாத்திரங்கள் படுக்கைகள் அனைத்தும் நனைந்த நிலையில், மக்கள் உறங்க கூட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, தரமற்ற பணி குறித்து விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X