தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 749 கால்நடை டாக்டர்கள் பணி நீக்கம்

Added : செப் 17, 2020
Share
Advertisement

மானாமதுரை:தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 749 கால்நடை டாக்டர்களை பணி நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
தமிழகத்தில் கால்நடை மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனை தவிர்க்க தமிழக அரசு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்களை நியமித்தது. 2019ல் 784 டாக்டர்களுக்கு தற்காலிக பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றினர்.

இவர்கள் அனைவரையும் நேற்று ஒரே நாளில் பணியில் இருந்து விடுவித்து அவர்களிடம் உள்ள மருத்துவமனை சாவி உள்ளிட்ட இதர பொறுப்புகளை பெற்று கொள்ளுமாறு மண்டல இணை இயக்குனர்களுக்கு கால்நடை பராமரிப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம் சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றிய 45 டாக்டர்கள் பணியில் இருந்து விடுவிக்க பட்டு உள்ளனர். இதனால் மாவட்ட கால்நடை மருந்தகங்கள், கிளை மருந்தகங்களில் உதவியாளர்களை வைத்து சிகிச்சையளிக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X