பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு - மின் உற்பத்தியும் அதிகரித்தது

Added : செப் 17, 2020
Share
Advertisement

தேக்கடி:பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1200 கன அடியில் இருந்து 1400 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் தேனிமாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின்நிலையத்தில் மின் உற்பத்தியும் அதிகரித்தது.

நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 126.20 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1390 கன அடியாகும். நீர் இருப்பு 3877 மில்லியன் கன அடியாகும். தமிழகப்பகுதிக்கு குடிநீர் சாகுபடிக்காக நீர்திறப்பு 1200 கன அடியில் இருந்து 1400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெரியாறில் 2 தேக்கடியில் 3 மி.மீ. மழை பதிவானது.மின் உற்பத்தி அதிகரிப்புபெரியாறு அணையில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டதால் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின்நிலையத்தில் 108 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி 3 ஜெனரேட்டர்கள் மூலம் 126 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் 61.71 அடியாக (மொத்த உயரம் 71 அடி) இருந்தது. நீர்வரத்து 1094 கன அடியாகவும் நீர்திறப்பு 972 கன அடியாகவும் இருந்தது. நீர் இருப்பு 3937 மில்லியன் கன அடியாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X