எக்ஸ்குளுசிவ் செய்தி

தி.மு.க., கூட்டணியை வீழ்த்த தமிழக பா.ஜ., வியூகம்

Updated : செப் 17, 2020 | Added : செப் 17, 2020 | கருத்துகள் (108) | |
Advertisement
வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., - காங்., கூட்டணியை வீழ்த்துவதற்கு, தமிழக பா.ஜ., தேர்தல் மேலிட பொறுப்பாளராக, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நியமிக்கப்பட உள்ளார்.தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளராக உள்ள முரளிதர் ராவ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக, மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த, தேசிய செயலர், சுனில் தியோதர் நியமிக்கப்பட உள்ளார்.இது குறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள்
DMK, BJP, MK Stalin

வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., - காங்., கூட்டணியை வீழ்த்துவதற்கு, தமிழக பா.ஜ., தேர்தல் மேலிட பொறுப்பாளராக, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நியமிக்கப்பட உள்ளார்.

தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளராக உள்ள முரளிதர் ராவ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக, மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த, தேசிய செயலர், சுனில் தியோதர் நியமிக்கப்பட உள்ளார்.இது குறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக பா.ஜ., மேலிடபொறுப்பாளர் பதவியில், முரளிதர் ராவ், ஆறு ஆண்டுகளாக உள்ளார். 2014 லோக்சபா, 2016 சட்டசபை, 2019 லோக்சபா என, மூன்று தேர்தல்களில், தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைக்கவில்லை. எனவே, 2021 சட்டசபை தேர்தலுக்கு முன், முரளிதர் ராவ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக, மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த, சுனில் தியோதரை நியமிக்கப்படலாம். அவர் தற்போது, திரிபுரா, ஆந்திரா மாநில பொறுப்பாளராக உள்ளார். திரிபுராவில், பா.ஜ., ஆட்சி வருவதற்கு, அவர் முக்கிய பங்கு வகித்தார்.
உ.பி., மாநிலத்தில், தேர்தல் பணியாற்றிய சுனில் தியோதர், பல்வேறு போராட்டங்களை, மக்களுடன் மக்களாக தெருவில் இறங்கி நடத்தியவர். அதனால், அவரை தமிழக பொறுப்பாளராக நியமித்தால், தி.மு.க., - காங்., கூட்டணியை, வீழ்த்துவதற்கு களம் அமைப்பார் என, பா.ஜ., மேலிடம் கருதுகிறது.
அதேபோல, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த, தேசிய பொதுச்செயலர் ராம் மாதவ், தேசிய செயலர் சத்தியகுமார், தேசிய செய்தி தொடர்பாளர் நரசிம்ம ராவ் ஆகியோரும், தமிழக பொறுப்பாளர் பட்டியலில் இடம் பெறுள்ளனர். .கடந்த, 2019 லோக்சபா தேர்தல் பொறுப்பாளராக, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் தேர்தல் பணி நடந்தது. ஆனால், பா.ஜ., வெற்றி பெறவில்லை. எனவே, வரும் சட்டசபை தேர்தல் பொறுப்பாளர் பதவிக்கு, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நியமிக்கப்பட உள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை தோற்கடித்தவர் என்பதால், அவர் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதால், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவதற்கு, அவரது தேர்தல் வியூகம் முக்கிய பங்கு வகிக்கும் என, மேலிடம் கருதுகிறது.இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை போட்டி?


சென்னை, கொளத்தூர் தொகுதியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் போட்டியிட்டால், அவரை எதிர்த்து, பா.ஜ., வேட்பாளராக, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலையை நிறுத்த, பா.ஜ., மேலிடம் ஆலோசித்துள்ளது.ஸ்டாலினுக்கு எதிராக, இளைஞர் சக்தியை திரட்டும் வகையில், 'நீட்' தேர்வு, புதிய கல்வி கொள்கை, ஹிந்தி விவகாரத்தில், தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை, அண்ணாமலை அம்பலப்படுத்துவார். மேலும், தி.மு.க.,வில், வாரிசு அரசியலை, ஸ்டாலின் ஊக்குவிப்பதை எதிர்த்தும், அண்ணாமலை பிரசாரம் செய்யும்பட்சத்தில், அது, தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் என, பா.ஜ., தரப்பில் நம்பப்படுகிறது.

- நமது நிருபர் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (108)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VADIVEL - BELPAHAR,இந்தியா
18-செப்-202017:39:15 IST Report Abuse
VADIVEL By seeing all the comments before MP election, I thought DMK would be struggling. But, they almost won all the seats. Now also I am seeing only anti-DMK comments. Your comments are not reflecting people mind.
Rate this:
SKANDH - Chennai,இந்தியா
23-செப்-202009:55:35 IST Report Abuse
SKANDH அன்னே அந்த தெனாவட்டிலேயே இருங்க போதும். லோக் ஸபாஹா தேர்தலுக்கு பின் வந்த பை எலெக்ஷன்ஸ் பாருங்க , விக்கிரவாண்டி, நான்குனேரியை பாருங்க. VELLORE எலெக்ஷனை பாருங்க.PANCHAYAT எலெக்ஷனை பாருங்க . வேண்டாம் அன்னே , பொறுங்க.2021 லேயே தெரிந்து விடும்.2021 EDAPPADIAR திருப்புவார் முதல்வராக. இது திண்ணம். பிறகு DMK காணாமல் போகும்....
Rate this:
eswaran - tiruppur,இந்தியா
24-செப்-202000:11:46 IST Report Abuse
eswaranகனாகண்டுட்டு படுத்திட்டிரு...
Rate this:
Cancel
Suresh Ulaganathan - Bangalore,இந்தியா
18-செப்-202015:15:51 IST Report Abuse
Suresh Ulaganathan தமிழகத்தில் உள்ள பா ஜ க உறுப்பினர்கள் அனைவரும் தமிழர்கள். ஆனால் திட்டம் தீட்டுவதோ அகில இந்திய அளவில் திட்டம் போடுவது போல் உள்ளது.
Rate this:
murali - Chennai,இந்தியா
19-செப்-202013:13:23 IST Report Abuse
muraliதி மு க வில் முக்கிய தலைவர்கள் எல்லோரும் தெலுங்கர்கள். தேர்தல் வியூகம் வகுப்பதோ அரிய ஐயர் பிரசாந்த் கிஷோர், பீகார் ப்ராஹ்மினார்...
Rate this:
SKANDH - Chennai,இந்தியா
23-செப்-202009:56:56 IST Report Abuse
SKANDH BJP க்கு தில்லாலங்கடி வேலை தெரியுமா?DMK வுக்கு தெரியும்....
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
18-செப்-202010:56:02 IST Report Abuse
Gnanam காங்கிரசை வீழ்த்தவேண்டிய அவசியமில்லை, தானாகவே தடம் புரண்டுவிட்டதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X