சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிக்கல்! மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் வினியோகத்தில்...திட்டம் செயல்படுத்துவதில் பல குளறுபடி

Added : செப் 17, 2020
Share
Advertisement





தேனி, செப். 16-

தேனி மாவட்டத்தில் பயோமெட்ரிக் கருவி கையாள்வது குறித்து ரேஷன் பணியாளர்களுக்கு பயிற்சி இன்றியும், மேம்படுத்திய தொழில் நுட்ப கருவிகள் இல்லாததாலும் கார்டுதாரர்களுக்கு உணவு பொருள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் 4.18 லட்சம் ரேஷன் கார்டுதார்களுக்கு 750 ரேஷன் கடைகள் மூலம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிப்பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது. இதில் முறைகேடுகளை தவிர்க்க இம்மாதம் முதல் 'பயோ மெட்ரிக்' நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ரேஷன்கார்டில் பெயர் உள்ள நபர் ஒருவர் 'பயோமெட்ரிக்' கருவியில் விரல்பதிவு செய்தால்தான பொருட்கள் பெற முடியும்.

தவிப்பு : ஆனால் திட்டம் செயல்படுத்துவதில் பல குளறுபடிகளால் பொருட்கள் பெற முடியாமல் தவிக்கின்றனர். முன்னதாக விற்பனையாளர்களுக்கு தாலுகா வாரியாக பயோமெட்ரிக் பயன்படுத்துவது பற்றி ஒருநாள் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்தனர். ஆனால் அவர்கள் செப். 4 வரை போராட்டத்தில் இருந்ததால் பயிற்சி நடத்தவில்லை. மறுநாள் பணிக்கு வந்து புதிதாக பயோமெட்ரிக் கையாண்டனர். பலருக்கு ஸ்கேன் செய்தல், விரல்பதிவில் தெளிவு ஏற்பட வில்லை. விரல்பதிவு வராதவர்களுக்கு 'ஓடிபி'முறையில் பொருட்கள் வழங்கும் போது பயன்பாடு இல்லாத அலைபேசி எண்களால் 'ஓடிபி' பெற முடியவில்லை. இரண்டும் இல்லாமல் 3வது வாய்ப்பாக 'ப்ரோக்ஸி' முறையில் தாங்களாகவே வினியோகிப்பதில் அவப்பெயர் ஏற்படும் என பணியாளர்கள் தயங்குகின்றனர்.4ஜி சேவை தேவை:பயோமெட்ரிக் பயன்படுத்த 4ஜி தொழில் நுட்பம் சிறந்தது. ஆனால் அரசு 3 ஜி சிம்கார்டு வழங்கியதால் பலஇடங்களில் சிக்னல் கிடைக்கவில்லை. அதனால் மலைக்கிராமங்களில் மேகமலை, போடியில் பயோமெட்ரிக் கருவியை திரும்ப ஒப்படைத்துள்ளனர்.

தொழில் நுட்ப கோளாறுகளை சரி செய்ய 2 தாலுகாவிற்கு ஒரு தொழில்நுட்ப உதவியாளர் நியமித்தும் சிக்கல் உள்ளது.மாதம் 15க்குள் 50 சதவீதம் பொருட்கள் வினியோகம் நடக்கும். தொழில் நுட்ப குளறுபடியால் 35 சதவீத வினியோகம் மட்டுமே நடந்துள்ளது என விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இதில் குறைபாடுகளை களைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X